White பல காதல் கதைகளைச் சேர்த்து வைத்தேன் பல காதல் முறிவுகளுக்கும் நானே சாட்சி ஆனேன் கூர்மையாக நான் இருக்கும் நேரத்தில் எழுத்துலகையே ஒரு நொடியில் ஆட்டிப் படைப்பேன் காகிதத்திற்கு ஆறுதல் சொல்லும் நண்பனானேன் பலரின் புத்தகப்பையில் சுற்றுலா சென்றேன் கைத்தொலைப்பேசிகள் இல்லா அந்த பொன்னானக் காலம் பலரின் எழுத்துத்திறனை வெளிக் கொணர உறுதுணையாய் இருந்தேன் தேய்பிறையைச் சந்திக்கும் நிலாவைப் போல இறுதியில் என் வாழ்வும் தேய்ந்தே முடியும் நிலவிற்கோ விடிவு காலம் உண்டு/ நானோ பலர் வளர்வதற்கு என் உடலை வருத்தி எழுத்துலகிற்கே அர்பணித்து உலகிலிருந்து விடைப்பெற்றுச் செல்கிறேன் ©Santirathevan_Kadhali #love_shayari #life_lesson #SAD #motivatation