Unsplash எந்தவித வாசிப்பும் இல்லாமல் அந்த அபூர்வ மனிதனின் வாழ்வின் புத்தகத்தின் பக்கங்கள் வாசனை மாறாமல் என்னை ஒரு ஏக்க பார்வை பார்த்து பெருமூச்சு விடும் அந்த சப்தத்தில் இந்த பிரபஞ்சத்தின் நடுக்கத்தை உணர்ந்த அந்த காலமோ ஓடோடி வந்து என் கைகளில் அந்த புத்தகத்தை திணித்து விட்டு செல்கிறது... நான் வரும் வரையில் இந்த புத்தகத்தின் வாசத்தையும் கூட எவரிடமும் நுகர விடாதே என்று சொல்லி விட்டு வேகமாக என்னை விட்டு நகர்கிறது... நானோ செய்வதறியாது திகைத்து நிற்கும் சமயத்தில் அந்த புத்தகத்தை எவரோ அபகரித்து ஓடுவதில் நான் மூர்ச்சையாகி கிடக்கிறேன்... அந்த காலமோ எனை பரிதாபமாக பார்த்து விட்டு அந்த புத்தகத்தின் அடையாளமான அந்த அபூர்வ மனிதனை தேடி இங்கும் அங்கும் அலைவதை நான் சூட்சமமாக வேடிக்கை பார்க்கிறேன் யார் அந்த அபூர்வ மனிதராக இருப்பார் என்று எண்ணியபடி... #இளையவேணிகிருஷ்ணா. நாள் 25/12/24. ©இளையவேணிகிருஷ்ணா #library