Nojoto: Largest Storytelling Platform
mownanabi5851
  • 70Stories
  • 78Followers
  • 595Love
    25.7KViews

Mownan Abi

Trust ur heart beat

  • Popular
  • Latest
  • Video
306da09a04d78325ca6aa185d54360c8

Mownan Abi

விழியோரம்
விளைந்து நாணுதடி
நம் காதல் பயிர்

உள்ளத்தின்
ஆழத்தில் துளிர்ந்து

கனிவதெல்லாம் 
காலம்
கடத்தும் செய்கையடி

அழகுத் தளிரில் 
மலர்வதே 
நம் இளமையின் ரகசிய காதலடி

போதுமா 
என்றென்னிடம்
வினவாதே 

போதவில்லை 
என பரிதவிப்பில்
என் மனம் தொலைந்திட கூடும்

இறப்பையும்
இறுதியாய் காதலித்து
காலம் களைவோம் வா
என் உயிரே..!!


             -மௌனன்💕 #dilbechara
306da09a04d78325ca6aa185d54360c8

Mownan Abi

அவள்
வினோதமானவள் 
என்னுள் யாதும் ஆனவள்

வீட்டிற்குள்
சிறைப்பட்ட கூட்டுக் கிளியும் அவள்

கோபத்திற்கு 
பேரழகு அவள்
என் மன அரசவைக்கு அரசி அவள்

பிடிவாதக்காரி அவள்
ஆனால் அவளின் பாசத்திற்கு
சிறு மழலையும் ஏங்கித் தவித்திடும் பாசக்காரி 


நானெனும் 
மௌனத்தை முழுமைக்கும் 
படித்தவள் அவள் 

என் 
இயல்பை இயல்பாய்
நேசிக்கத் தெரிந்த உயிரானவள்

என்னிடம்
அவ்வப்போது வெளிப்படும்
அதீத கோபத்திற்கு
தன்னுள் தன்னையே வருத்திக் கொள்ளும் அழுத்தக்காரி

விதியின்
விளையாட்டில் சிக்கித் தவிக்கும்
பருவ மங்கையவள் 
அவளோடு வாழத் துடிக்கும் காதல் வாசி நான்

தொலைதூர காதல் தான்
அவளும் நானும் 
அளவில்லா நம்பிக்கையின் மரமும் வேருமாய்
எங்கள் காதல்

எப்பொழுதுமே
பிறர் பார்வைக்கு "அவள் வினோதமானவள்"
என்னுள் யாவும் அவள்..!!




                                                    -மௌனன்💕 #mownan

#Waterfall&Stars
306da09a04d78325ca6aa185d54360c8

Mownan Abi

நீரில்
நனைந்த என் எழுத்துக்கள்
கனவாய் கானலாய் 
ஓர் மாபெருந் தேடலில்

என்னவள்
எங்கிருக்கிறாள் 

எனை அவளுள் முழுமையும் 
ஆட்கொள்ளும் 
காதலை சுமப்பாலோ 
எனும் தேடலுக்குள் 
நான் தொலைத்தேன்

சேமிப்பெனும்
கவிதை கிறுக்கல்கள்
யாவும் 

அவளுக்கான 
அவளின் தளிர் பாதங்களை 
தொட்டூரசிப் போக எத்தனித்து காத்திருக்கிறது

நீரில் 
நனைந்த வரிகளாய் நான்..!!

💕 #river
306da09a04d78325ca6aa185d54360c8

Mownan Abi

எனை
பின் தொடர்ந்து 
காதலிக்கும் மாயாவி கூட்டமது

தட தட
சப்தமிட்டு தாலாட்டுப் பாடும்
தொடர்வண்டி பயணம்

சாளரம்
தீண்டிய மெல்லிசை காற்றும்
சிறு சிறு சாரல் மழையும்

என்
கன்னம் தொட நாசியில்
சுகமாய் நுழைந்த காற்றுக்குள்
தேடுகிறேன்

எங்கேனும்
அவள் ஸ்பரிசம் தழுவிப் போகும் 
காற்று வந்திருக்க கூடுமோ 
எனும் பரிதவிப்பில்

காத்திருக்கிறேனடி
பெண்மையே உனக்காக
என் கவி வரிகளை சேமித்து
உன்னுள் சேதாரமற்று 
தொலைத்திட

கனவெனும் 
பெருங்காதலடி நீ எனக்கு..!!

💕 #river
306da09a04d78325ca6aa185d54360c8

Mownan Abi

நான் 
கண்டுணர்ந்த முதல் ஆண்மகன்

எனை
மார்போடு மெல்லச் சாய்த்து 
கதகதப்பையும் பாதுகாப்பையும் உணர்த்திய உறவு

எட்டி வைத்த 
கால்கள் தடுமாறிட கூடுமோ 

என அன்று 
அவர் இதயம் துடிதுடித்தை 
இன்று உணர்ந்து மெய்சிலிர்த்துப் போனேன்

எவ்வளவு
எழுதினாலும் சொல்லுக்கு 
அடங்கா கவிதை அவர்

என்
முதல் காதலும் என்னை புரிந்து 
எனக்காக உலகில் நடைபயிலச் செய்த 
முதல் ஆண் மகன் அப்பா

இன்று
நான் ஆயிரம் ஆண்களுக்கு மத்தியில் 
சாலையை கடந்தாலும் 

அன்று 
அவர் சுண்டுவிரல் பற்றி நடந்த 
பாதுகாப்பு இன்று இத் தனிமையில் இல்லை

அதிகம் 
அவரோடு பேசியதில்லை ஆனால் 
மனதுக்குள் பேசி விடுகிறேன் என்றும் 
அவரோடு அவரின் மழலையாய்

இப்பொழுதும்
அவர் விழிகளில்
நான் கை குழந்தை தான் 
அதட்டி பேசினாலும் உடனே சமாதானிக்கும் 
அன்பின் பிணைப்பு உயிரின் அழகு அப்பா

என்றும்
என் பாதுகாப்பு அரண் 
என் விழியின் ஓவியம் அவர் மட்டுமே 

ஜ லவ் யூ அப்பா..!!

💕 #river

12 Love

306da09a04d78325ca6aa185d54360c8

Mownan Abi

உதிரிப்பூக்களின்
நறுமணமாய் 
சில நொடிகள் 
வந்துச் செல்லும் நினைவுகள்

பழகிய
நிமிடங்கள்
சேதாரமற்று நிறையவே
சேமித்துக் கொண்ட மனது

சந்தர்ப்ப வாதிகளாய்
நழுவிச் செல்ல
ஏங்கித் தவித்த அவர்களை நீங்கிட முயன்று

வாழ்கையின்
இறுதி முனைவரையிலும் 
நீங்கினேன்

விழியோடு
ஊற்றெடுக்க மறந்துபோன 
நீர் குமிழ்கள் வற்றும் அளவிற்கு
வெறுத்தபின் 

வாழ்கிறேன்
இருளையும் என் விழியில் 
வெளிச்சமாக எண்ணி 

மௌன கதறலில்லா 
அமைதியின் இயற்கையில் 

கடந்தவர்கள்
கடந்ததாக இருக்கவே தேடலில்லா 
பாதையில் !!

- மௌனன் 💕 #moonlight
306da09a04d78325ca6aa185d54360c8

Mownan Abi

விடிந்தும் விடியாத 
காலை பொழுது 
விழிதிறக்க காத்திருந்த வேளையில்

மெல்லமாய்
தலைவருடி 
அவள் ஈரக் கூந்தல் மழைத்துளி 
என் கன்னம் தீண்ட

என்
மேலாடை சற்றே அழுத்தமாய்
பற்றி இழுத்தவள்

கோபமில்லா
அன்பின் வலியில்லா 
மிருதுவான இதழில் 
நெற்றி பதிந்து உணரச் செய்தாள்

அவள்
அன்பில் பெண்மையின்
மென்மை பொருந்திய 
ஆழமான காதலை

அதிலிருந்து
மீண்டு அவளை 
அணைக்க தேடினேன் 
கலைந்தது கனவு 

சாளரம் 
தோன்றிய வெளிச்சத்தில் 
சூரிய கதிரொளி முத்தம் எச்சமாய் 
இறுதியில் வென்றது எனை..!!

-மௌனன்💕 #Silence
306da09a04d78325ca6aa185d54360c8

Mownan Abi

மலரினும்
மென்மைய "டி" நீ எனக்கு

காதலினும்
பெருங்கவிதைய "டி" நீ எனக்கு

நட்பினும்
காவியம "டி" நீ எனக்கு

அன்னையினும்
அன்பில் உயர்ந்தவள "டி"
நீ எனக்கு

கவிதையினும்
என்னுள் உயிர்க்கும் 
உயிர்மெய் எழுத்துக்கள "டி" நீ எனக்கு

இன்னும்
சொற்கள் அடுக்கிட
தான் ஆசையாய் உள்ளது 
பல முறை 
"டி" எனும் வார்த்தையில்

உனை 
வருத்தம் கொள்ளச் செய்ததில் 
விழியோரம் 
நீர்க்குமிழோடு மௌனமாய் இந்த மௌனன் ..!!

💕 #moonlight
306da09a04d78325ca6aa185d54360c8

Mownan Abi

ஆங்கில
அகராதியில் முளைத்து 
அன்பெனும் ஆழ்ந்த உணர்வில் 
தொலைந்திருக்கும் வார்தை அது

பொழுதுபோக்கில் 
பேசிச் செல்லும் வார்தையல்ல 
அழகான ஆழமான அன்பின் பிணைப்பு

இரு 
மனதெனும் பந்தத்தின் தேடலும் தவிப்பும் 
தங்களுக்குள் பேசிக் கொள்ளும் மௌன மொழி

காதலெனும்
சொல்லைவிட வலிமையானது உயர்வானது 
வலிகள் நிறைந்த ஏக்கத்துடனானது அச் சொல்

ஏன்
அவ்வளவு பிடிக்குமென்பதை விட 
ஏன் உனை இவ்வளவு தேடுகிறேன் 
என வினவும் சுவாசக் காற்றே அவ் வார்த்தை

இரவெது பகலெதுவென
அறியாமல் தொலைக்கப்பட்டேன் 
உன் இதயத்தில்

சில
நொடி பிரிவுகளில் கூட 
விழிகளை தேடிச் செய்து விரல்களை
எழுதச் சொல்லி கைபேசியில் கரைந்து கொண்டிருக்கும் 
உண்மையான அன்பின் உச்சபட்சமே 

"I 
   Miss
        You"..!!

-மௌனன்💕 #alone
306da09a04d78325ca6aa185d54360c8

Mownan Abi

என் 
பிறப்பின் அடையாளம்
நானென்ற தோற்றத்தின் கரு அவள்

கண்ணில் புலப்படும்
புலப்படாத 
எதுவாகினும் தோற்றமே 
ஒரு பெண்மையின்
மென்மையில் உருவானது 

அவள்
அழகு தான் 
மறுத்திடவில்லை 

தாய்மையில் 
பசியில் அழுகும் 
மழலலையை அணைத்திடுகையில் 
தன் மார்போடு 
தாலாட்டுகையில் என அழகே அவள்

அவள்
மார்புச்
சதைகள் புடைத்தது 
நீ இச்சை கொள்ள அல்ல 

உன்
பிறப்பில் பசியெனும் 
உன் வயிற்றுக்கு
அவள் உதிரத்தை உணவாக்கிட
 படைக்கப்பட்டது அவள் மார்பு

இடை கண்டு
மோகம் கொள்ளாதே 

என்றோ 
ஒரு நாள் 
சிறு பிள்ளையாக 
நீ இருக்கையில் 

சாலையில் 
விழுந்த நொடி 
உனை சுமந்த ஊஞ்சல் 
அது மறந்துவிடாதே

யோனி யென்னும்
ஓரிடத்தில்
தான் நீயும் நானும் பிறந்தோம் என்பதை மறவாதே

உன்
ஆண்மை தீர்க்கும் இடமல்ல அது

வாரத்தில்
மூன்று நாட்கள் 
இறந்து பிழைக்கும் அவள் 

மணமுடித்து 
பின்
ஈரைந்து மாதங்கள் 
வலி சுமக்க
பிறந்தோம் என்பதை நீயும் உணர்வாயெனில்

பெண் 
காமம் தீர்க்கும் பொருளல்ல
தாய்மையின் அறம் என்பதை உணர்வாய் ..!!

💕 #Isolated
loader
Home
Explore
Events
Notification
Profile