Nojoto: Largest Storytelling Platform
nojotouser4829954725
  • 9Stories
  • 12Followers
  • 36Love
    0Views

மாதேஷ்

வலியால் வடிவம் ஆனவன்

  • Popular
  • Latest
  • Video
a5299f5b3e5f0e7a785874a038878b43

மாதேஷ்

கண்களின் குறைகளால்  ஊதா கடக்கின்றோம்
வானின் முளுநீலம் முழுவதும் ரசிக்கிறோம்..
விரும்பியவரிடம்  குறைகள் இருந்தும் மறக்கிறோம்
விரும்பியே உன்னதமான காதல் தருகிறோம்..
கடுஞ்சொல் வேண்டாம்!
காதலால் கலியுகம் வெல்வோம்
வெறுப்பே வேண்டாம்!
மகிழ்ந்து மகிழ்வித்து  மாய்வோம்.. 
-மாதேஷ்❤️ #tamilquotes #love #belif
a5299f5b3e5f0e7a785874a038878b43

மாதேஷ்

காதல் புலந்தேடி நான்!!! 
திரிந்தேன் உனைத்தேடி தான்!!!

மறுஜென்மம் இருந்தா மைலாஞ்சி ஆகணும்,
சிவந்த உள்ளங்கையில் ஆட்சி ஆளனும்...

சூடான உன் நெஞ்சில் சுருண்டு தூங்கனும்,
தோல் சுருங்கி சொர்கம் வர  உடன் வாழனும்...

காற்றோட இசை கொண்ட பந்தம் தீரணும் ,
 நம் காதல் அதை தாண்டி வாழனும்..

நேற்றாய் இருந்து , 
இன்றாய் நிகழ்ந்து, 
நாளையும் நிறைவாய் 
நீயே !!! 
                                                     _மாதேஷ்❤️ #Tamilquotes #love #kadhal
a5299f5b3e5f0e7a785874a038878b43

மாதேஷ்

முடிவிலி காதல் தந்தவள் உடன் இல்லை, மனமே மறந்து போ..
 துடிப்பினில் துடித்தவள் துணை இல்லை , 
இதயமே நின்று போ...
கனவினில் நினைவினில் நிறைந்தவள் இங்கில்லை, மெல்ல கரைந்து போ..
மழை பெய்யும் போது இலை தொட்ட தூரல் இலையிலேயே தங்குதே !!
பிரிந்து அவள் சென்ற போதும்  நினைவுகள்   தேங்குதே!!
கடந்தவள் கண்டு கலங்குவது பிழை...
வேர் அறுத்து சென்றவள் வெருப்பதில் இல்லை பிழை...
உருகிய இதயத்தை உருவம்கொள்  !!!
உண்ணவள் வருவாள் அமைதிகொள் !!!
-  மாதேஷ்❤️ #love

2 Love

a5299f5b3e5f0e7a785874a038878b43

மாதேஷ்

அன்பு மழையில் அனுதினம் நனைந்திட நினைத்தேன்
அணு எங்கும் அவள் முகம் பதித்திட முயன்றேன் 
வண்ணங்கள் பல இருந்தும் கருவிழிகள் கண்டு கவிழ்த்தேன்!!!! 

நிஜம் காதல் நீ அறியாமல் போனாயோ 
சதை மோகம்  கொள்ளும் சாமானியன் என
 பிறிந்தாயோ ?

கொடை முடிந்தால் கொட்டிப்போகும் இலை அல்ல காதல்...
சூரை வந்து சுரண்டிய போதும்!!!
ஊன்றிய வேரின் உயிர் கொண்டு பூப்பூக்கும் என் காதல் !!!

-மாதேஷ்❤️ #காதல்

#காதல்

3 Love

a5299f5b3e5f0e7a785874a038878b43

மாதேஷ்

கவலை வேண்டாம் ... காலம் வரும்; 
காய்ந்த புல் கூட காக்கை கூட்டில் மெத்தை ஆகும்!!!!

சினம் வேண்டாம்... மறந்து வாழ்வோம்;
துளைபட்ட காயங்களின் அலறலை கூட இசையாக்கும் புல்லாங்குழல் நாம் ஆவோம்!!

வருந்த வேண்டாம்.. வசந்தம் பூக்கும்;
வாழ்கை ஒறு நாள் என்ற போதிலும் மகிழ்ச்சி சிறகடிக்கும்   ஈசல் போல் வாழ்வோமே !!!! 

ஆதவன் பார்!! அவனே நம் ஆசான்

"அந்தியில் தோல்வி என்ற போதும் அக்கினி சீற்றம் குறைவதில்லை"

      -மாதேஷ்❤️ #இதயம் #lifequotes #tamilquotes

#இதயம் #lifequotes #tamilquotes

3 Love

a5299f5b3e5f0e7a785874a038878b43

மாதேஷ்

பூ அவள் !!  புயல் அவள் !!
காதல் கடல் உள் கொண்டவள் !!

அழகே... !!!
 நீ கொண்ட நினைவுகளை நீராவியாய் மற்றினாய்
மோக மேகங்களை  என் வானில் நிறப்பினாய்
அழகெனும் அம்பு எய்து முகில் உறைய வைத்தாய்... 
உறைந்த இதயத்தை உன் அன்பினால் உருக வைத்தாய் ... 

காதல் கார்காலம் வாழ்வேங்கும்   வந்தது !! 
மனமெங்கும் மாழை தான் பெய்தது,!! 
அன்பின் அனை நிறைந்தது!!! 

காதலை மனம் அறிந்தது, மெல்ல மடை திறந்தது!!
கரைபுரண்ட  வெள்ளம்  கடலில் தான் கலக்கும்.
கடலே !! காதலியே !!

உண்ணில் தொடங்கி உணக்குள்ளே  என் வாழ்க்கை


-மாதேஷ் ❤️ #இதயம் #love #onesidelove

#இதயம் #Love #onesidelove

5 Love

a5299f5b3e5f0e7a785874a038878b43

மாதேஷ்

பேதையாய் பிறந்து
பெதுமையென  வளர்ந்து
மங்கையாய் மலர்ந்து
அறிவுடைமை அரிவையாகி !!!!
தெளிவு பிறந்து தெரிவையாய் மாறி
ஆட்டியாய் அன்பின் வழிகாட்டியாய்
மூதாட்டியாய் அனபவ ஊற்றாய்
நதி, நிலம்,பூமி அனைத்தும் அவளாய் 
சிறுமியாய் , மாதராய், மங்கையராய் 
உயிர்திணையில் உணர்ந்தவள்..
 அவள் !!!!

_மாதேஷ்❤️ #womensday #பெண்

#womensday #பெண்

4 Love

a5299f5b3e5f0e7a785874a038878b43

மாதேஷ்

நேற்றின் நேற்ச்சியை  அன்பு அனைத்ததோ??
மோகம் மெல்ல மைந்துணர்வாக மரியதோ?? 

தாக்கணங்கின் கணக்கு தப்பு  தான் ஆகுமா!!! 
தகை தடுக்க முடியாமல் தோழமைத்_தடுமாற்றமா!! 
 
தண் கொண்ட தலையாளியிடம் உலகம் தோற்றது 
அவதை கொண்டதால் இன்று அளி மலர்ந்தது...

நட்பின் வழி நயம் கொண்ட  நாம்  இனி கண்மூடி காயகம் கொள்வோம்... 

வீண் தயக்கம் வேண்டாம், விரும்புதல் ஒன்றே இனி செய்வோம்.... 

                                            -மாதேஷ் ❤️ #இதயம் #love #friendslove
#tamil _love

#இதயம் #Love #friendslove #tamil _love #poem

7 Love

a5299f5b3e5f0e7a785874a038878b43

மாதேஷ்

தோற்றுவித்தவன் !! என் தொடக்கம் அவன்...
வரைமுறை கற்பித்தவன் !! என்னை வரைந்தவன் ....
உறவின் ஆழம் உணர்த்தியவன், அவனே‌ என் முதல் உறவானவன் ...
ஊர் பழி‌த்தாலும், உலகம் எதிர்த்தாலும் உடன் நின்றவன்..

கண்டிப்பானவன் !!! மனம் கறை படியாதவன்
கனவினில் காசு கிடைத்தாலும் தனக்கென்று வைக்காதவன்.... ‌
தளிர் நடை போடும்போது  தாங்கிப் பிடித்தவன்..
மனம் தளர்ந்த போகும் போது தட்டி குடுத்தவன்..
உதிரம் வியர்வையென உருமாறும் வரை உழைத்தவன்...
அன்பன் ❤️ அன்பின் ஆனி வேர் ஆனவன்..

தொப்பிள் கொடி அறுத்து தொட்டிலிட தாய் கடமை நின்றுவிடும்...
அவன் அன்பின் முன் அணைத்தும் ஒருபடி இறங்கிவிடும்...
  இளமையை எனக்காக இலந்தவன், இறையருள் எனக்குள்    ஊட்டியவன்...   

இருக்கும் போது  அருமை அறியாதது மனித இயல்பு...   
நானும் ஓர் மானிதனாய் இன்று.
  _மாதேஷ்❤️ #appa #Dad_love #tamil


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile