Nojoto: Largest Storytelling Platform

ஒவ்வொன்றும் ஒருவிதம் கடல் மடியில் நடந்தாடி அலவன்

ஒவ்வொன்றும் ஒருவிதம்

கடல் மடியில் நடந்தாடி
அலவன் நள்ளி என்பிடியில்
வெந்து வந்து தந்ததுவே
நாவில் ஊரும் எச்சில்தனை ( நண்டு)

நீந்தி கிடந்து கிளுகிளுப்பாய்
செதில்கள் சிதறி பெய்த்தெடுத்து
ஊளியாள் அவளின் முட்பிடியில்
மிதமாய் உதிரும் வென்மலரே ( மீன்) 

காடுகள் கடந்து மேய்ந்ததுவாய்
குஞ்சுகள் கொஞ்சம் தந்ததுவாய்
கொதிக்க கிடக்கும் யௌவனமே
கறியாய் எழும்பாய் சுகமனமே ( நாட்டு கோழி)

எல்லாம் கலந்து ஒருபிடியாய்
நாவின் இசையை மீட்டிடுதே
கண்கள் கலங்கும் காரத்திலும்
இன்னும் என்றே கேட்டிடுதே ( ஞாயிறு ) Foodie 

#foodie #foodlove #lovefood #yqquotes
ஒவ்வொன்றும் ஒருவிதம்

கடல் மடியில் நடந்தாடி
அலவன் நள்ளி என்பிடியில்
வெந்து வந்து தந்ததுவே
நாவில் ஊரும் எச்சில்தனை ( நண்டு)

நீந்தி கிடந்து கிளுகிளுப்பாய்
செதில்கள் சிதறி பெய்த்தெடுத்து
ஊளியாள் அவளின் முட்பிடியில்
மிதமாய் உதிரும் வென்மலரே ( மீன்) 

காடுகள் கடந்து மேய்ந்ததுவாய்
குஞ்சுகள் கொஞ்சம் தந்ததுவாய்
கொதிக்க கிடக்கும் யௌவனமே
கறியாய் எழும்பாய் சுகமனமே ( நாட்டு கோழி)

எல்லாம் கலந்து ஒருபிடியாய்
நாவின் இசையை மீட்டிடுதே
கண்கள் கலங்கும் காரத்திலும்
இன்னும் என்றே கேட்டிடுதே ( ஞாயிறு ) Foodie 

#foodie #foodlove #lovefood #yqquotes