கடவுள் இல்லை உறவு சொந்த பந்தம் ஒன்னு கூடி, வருடம் கெழம தேதி குறிச்சி. சாமி தேடி காட்டுக்குள்ள, ஒன்னு உறவா நாடிப் போயி. சுத்தி நின்னு சுத்தம் செஞ்சு, அடுப்பு வெட்ட பொங்க வெச்சு. சேவ படச்சு ஆடு வெட்டி, வெந்த கரியை எலையப் போட்டு. சீமச் சரக்கு இறக்கியாந்து, சோடி போட்டு கதையப் பேசி. வம்பு தும்பு தீத்து வெச்சு, பொழுது சாய மிச்சம் சேத்து. அக்கம் பக்கம் பகுந்து போக, மக்க நாங்க மிச்சம் ருக்கோம். வருட வருடம் வந்து போவோம், எங்க சாமி காத்து நில்லு, அடுத்த களரி கூடி வாரோம்..... மதமும் இல்லை பிரிவும் இல்லை இந்துவும் இல்லை சாதியும் இல்லை #கிராம_விழா #வருடக்_களரி கிராம தெய்வ வழிபாடு அதனிலும் பிராமணர்கள் உட்புகுந்து விநாயகர் நட்டு வினை தீர்க்க யாகம் வெச்சு சில்லறை அல்ல முயல்கிறார்கள் #village #villagelife