உள்ளினேன் உறவே உனையே..! உள்ளிருந்து உளம்யாவும் பல்கி பெருகி நல்லுறவு நல்கி நாவில் நானெனும் சொல் மழுங்கி நாமென நன்னதுவாகி இலைமறையாய் சிலர் பிழையில் வளர்பிறையாய் தீதாகி ஐம்புலம் அடக்கியாங்கு அயர்வாய் தேடி கூடி நினைவது நெகிழ்வென நாடி நீக்கமற நின்றன அத்திரு விருத்திங்கள்..! செப்பிடும் என்நாவது அணங்கென வணங்கி உறவில் கிறங்கி உயிரில் இறங்கிய மென்னுணர்வு கொண்டேன்..! கண்டீரோ..! உறவுகளில் கள்ளினும் பெருமகிழ் போதையது கொண்டீரோ..! உறவில் இத்துணை உயர்வோ..! விருத்தங்கள் எல்லாம் விருப்பத்தில் நீள..! உள்ளத்தின் எண்ணங்கள் எல்லாம் பாதியில் திக்கி நிற்கிறது..! நமதின் அடுத்த சந்திப்பிற்காய்..! சொந்தங்களே..! fortunately this is my 650th quote...!😇😇😇 #சொந்தம் #பாசம் #அன்பு #yqkanmani #yqகண்மணி #yqbaba