Nojoto: Largest Storytelling Platform

மரணம் வரை மனைவி ************************* ஓர் நா

மரணம் வரை மனைவி 
*************************

ஓர் நாள் இரவு நேரத்தில்
ஒரு ஏழை விவசாயி
தன் வேலைகளை எல்லாம்
முடித்து விட்டு
உறங்கிக் கொண்டிருந்தான்..

அப்போது அவன் கனவில்
கையில் கரும்பலகையுடன்
கடவுள் வந்தார்..

”இந்த கரும்பலகையில்,
உனக்கு தெரிந்த முப்பது
உறவுமுறைகளின்
பெயர்களை எழுது” என்றார்..

அந்த விவசாயும்,
“அப்பா, அம்மா ,
தாத்தா , பாட்டி ,
மனைவி , மகன் , மகள் ,
அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி ,
சித்தப்பா , சித்தி , மாமா , அத்தை ,
காதலி , நண்பன்” என
முப்பது பேர் பெயரை எழுதினான்..

அப்பொழுது கடவுள்,
“கண்டிப்பாக இதில் நீ
இரண்டு பேர் பெயரை
அழிக்க வேண்டும்.,
நீ யாரை இழக்க முடியும்
என்று நினைக்கிறாயோ,
அந்தப் பெயரை அழி” என்றார்..

சற்று யோசித்த விவசாயி,
காதலி , நண்பன் என
இரண்டு பேர் பெயரை அழித்தான்..

கடவுள் மறுபடியும்,
“இன்னும் இரண்டு பேர்
பெயரை அழி” என்றார்..

விவசாயும்
கொஞ்ச நேரத்தில்,
“மாமா , அத்தை” என
இரண்டு பேர் பெயரை அழித்தான்..

விவசாயி இப்படியே,
இரண்டு இரண்டு பேர்
பெயராக அழித்தான்..

கடைசியாக
அப்பா , அம்மா ,
மனைவி , மகன் , மகள் என
இவர்கள் பெயர் மட்டுமே இருந்தது..

கடவுள்,
“இதிலிருந்தும் இரண்டு பேர் பெயரை
நீக்க வேண்டும்.,
நீ யார் பெயரை நீக்குவாய்?” என்றார்..

விவசாயி வருத்தத்துடன்
சிறிது நேரம் கழித்து,
அப்பா , அம்மா
பெயரை அழித்தான்..

கடவுள் மீண்டும்,
“இன்னும் இரண்டு பேர் பெயரை
அழிக்க வேண்டும்” என்றார்..

கடவுளுக்கு சற்று
எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது..
“அடுத்ததாக இவன் யார் பெயரை
அழிக்கப்போகிறான்?” என்று..

அப்போது விவசாயி,
மிகுந்த சோகத்துடனும்
மன வேதனையுடனும்
மகன் , மகள் பெயரை அழித்தான்..

கடைசியாக கரும்பலகையில்,
“மனைவி” பெயர் மட்டும் இருந்தது..

கடவுள் ஆச்சரியமுடனும்
ஆவலுடனும் கேட்டார்..

”மகன், மகள் பெயரை அழித்து விட்டு
எதற்காக மனைவி பெயரை
அழிக்கவில்லை?” என்று..

அதற்கு விவசாயி,
“மகள் எப்படியும்
இன்னொரு வீட்டுக்கு
வாழப் போய் விடுவாள்..

மகன்,
அவனும் அவனுடைய
மனைவி குழந்தை என வாழ்வான்..

கடைசி காலம் வரை
என்னோடு வாழக் கூடியவள்
என்_மனைவி மட்டும் தான்” என்றான்..

விவசாயின் பதிலைக் கேட்டு
வியந்து போன கடவுள்,
அவன் வேண்டிய வரத்தையெல்லாம்
கொடுத்துவிட்டு சென்றாராம்...

©Sangeetha  siva
  #Colors #huspend#wife#love#lifegoals#couplesgoals