எஸ்தர்.. இந்த பேருல என்ன இருக்குன்னு தெரில மரியா. அது 64 ஆம் வருஷம் நவம்பர் மாசம் 6 தேதி சரியா ஒரு இரவு 3 மணிக்கு நடுக்கடலில் நான் என் நண்பர்களோட பேசுனது கூட எனக்கு அவளோ தெளிவா நினைவு இருக்கு..! டே.. நேத்து தான் நான் மதராஸ்ல இருந்து போட் மெயில இங்க வந்தேன் மதராஸ்ல ஒரு படம் பாத்தேன் டா என்ன அருமையான படம் தெரியுமா என்னமோ எனக்கு எஸ்தர்க்கும் நடந்தத எல்லாம் சினிமா பிடிச்சிட்ட மாதிரி இருந்தது..! அதுல குறிப்பா ஒரு பாட்டு வரும் அது அப்படியே என் எஸ்தர் எனக்கு நினைவு படுத்திச்சுன்னு.. நான் சொல்ல உடனே நண்பர்கள் என்ன படம் அதுன்னு கேட்க அதுவா.. புரட்சித் தலைவர் படம் டா என்றேன் உடனே படகோட்டி படமா... பாவி மதராசுக்கு எஸ்தர் பாக்க தானே போறேன் சொன்ன எப்படி படம் பாத்த.. டே அவ தான் படத்துக்கு அழைச்சிட்டு போனா.. என்ன சொல்றடா பாவி..! என்றனர் நானோ அதை பொருப்படுத்தாமல் டே நீங்க வானவில்லை இரவுல வேற வேற வண்ணத்தில் பாத்ததுண்டா... சரோஜாதேவி தோத்துறவாங்கடா.. அவளோ அழகு டா..! இது பொறுக்க முடியாமல் அவர்கள் டே போதும் டா உன் எஸ்தர் புராணம்..! தனுஷ்கோடி -2 . . #dhanushkodi #காதலியம்