Nojoto: Largest Storytelling Platform

திருநெல்வேலி. பிறந்தது வளர்ந்தது மதுரையாக இருந்த

திருநெல்வேலி. 

பிறந்தது வளர்ந்தது மதுரையாக
இருந்தாலும் பிடித்த ஊர் இது. 

👇👇 திருநெல்வேலி. 

6ம் வகுப்பிலிருந்து 10 வரை படித்ததெல்லாம் அங்குதான் பாளையங்கோட்டையில் உள்ள St. Xavier higher secondary school. வீடு இருந்தது ஹைகிரவுண்டு என்ற இடத்தில். ரெயில்வே கிராஸ் ஒன்று போகும். அதற்கு பின் இருந்த பெரிய பில்டிங் அந்த EB office.  அங்குதான் அப்பா வேலை பார்த்தது DE ஆக.  தினமும் ஜீப் வரும் அழைத்துச் செல்லும். அதற்கு பின் அந்த சாலை சிவந்திபட்டி என்ற ஊர் வரைக்கும் செல்லும். மேலும் குற்றாலச் சாரல் திருநெல்வேலியில் தெரியும். 
அடிக்கடி அங்கு சென்று குளித்து வந்தது மறக்க முடியாதது. 

புகை கக்கிக்கொண்டு போகும் ரயிலை வீட்டிலிருந்தே பார்ப்போம்.
அப்போதெல்லாம் வீட்டருகில் இருந்து பாளையங்கோட்டை செல்வதற்கு 25 பைசா. ஜங்சனுக்கு 30 பைசா. டவுண் செல்வதற்கு 50 பைசா. ப்ரைவேட் பஸ்கள் நிறைய உண்டு.  பாட்டெல்லாம் போடுவார்கள். ஜங்சனில் புகழ்பெற்ற இரட்டை பாலம் வழியாக டவுணுக்கு செல்லலாம். கீழ்பாலத்தில் நடந்தும் சைக்கிளிலும் சென்றிருக்கிறேன். அருகிலே தாமிரபரணி ஆறு. சின்ன பாலத்தில் அதன் வழியாக பஸ்ஸில் செல்லும்போது பார்த்து மகிழ்ந்தது இன்னும் நினைவிலிருக்கிறது.

thiru9895514713633

Thiru

New Creator