தாய் மாமன் பந்தல் தோரணம் நிக்க வெச்சு மஞ்சள் தண்ணி தெளிச்சு ஊத்தி சடங்கு கழிச்சு அக்கா பொண்ண கல்யாணம் கட்டி அனுப்பி வெக்க வாரம் மொதவே வந்து நிப்பான் தாயி உறவா அப்பன் கணக்கா சீரு பொருளு மொத்தம் கட்டி சீல மாலை முடிச்சு வெச்சு சொந்த பந்தம் ஒன்னு சேக்க பத்தி ரிக்கை பிரிச்சு கொடுத்து நாளும் கெழம காத்து நின்னு தாயி மாமன் கூட நிப்பான் காலம் கடந்து நாம இன்னும் மறக்க முடியா உறவு தானே அக்கா தம்பி பாசம் கொண்டு தாயி வழியே மாமன் என்று தாயி உறவ தாங்கி பிடிச்சு மாமன் வருவான் காலம் கடந்தும் #அண்ணன்_தங்கை #மாமன்_மச்சான் தாய் உறவு மாமன் #yqkanmani #tamilquotes #tamilkavithai #tamilpoem #tamilmemes #tamilpoetry