Nojoto: Largest Storytelling Platform
baskarandurai4652
  • 28Stories
  • 0Followers
  • 184Love
    0Views

Baskaran Durai

  • Popular
  • Latest
  • Video
7df143962119000f637d4a64dcf8669f

Baskaran Durai

மது அருந்துகிறான் கணவன்
எங்கோ
மனைவியின் மஞ்சள் கயிறு
அறுக்கப்படுகிறது... #குழந்தையின்_கிறுக்கல்கள்
#yqகண்மணி  #மஞ்சள்

#குழந்தையின்_கிறுக்கல்கள் yqகண்மணி #மஞ்சள்

7df143962119000f637d4a64dcf8669f

Baskaran Durai

கைதட்டு வாங்கிக்கொண்டே
சாகின்றது ஈயொன்று... #குழந்தையின்_கிறுக்கல்கள்
#yqகண்மணி #மரணம் #yqகண்மணி

#குழந்தையின்_கிறுக்கல்கள் yqகண்மணி #மரணம் yqகண்மணி

7df143962119000f637d4a64dcf8669f

Baskaran Durai

பெண்மை...
பிரசவகிக்கும் நேரம்
தொப்பூள்கொடி அறுபடும்...

தம்பிக்காக-
தங்கையின் மணல்வீடு
தண்ணீர்க்குடம்-
சுமக்கையில் 
உடைந்த பருவம்

தாவணி-
கட்டத்தெரியாமல் 
அம்மாவிடம் வாங்கிய திட்டு
தோழிகள்-
மத்தியில் முதன்முதலாய் 
தெரிந்த பதில்

பிள்ளையார் கோவில்- 
முன்பு நிராகரித்த கடிதம்
பெயர் தெரியாத-
மீசை மீது கனவு வளர்த்த தூக்கம்

பள்ளிக்கூடம் செல்லாமல் 
பத்துமாதம் வீட்டில் சிறைவாசம்
சாதியின் காரணமாய் 
நிராகரிக்கப்பட்ட காதல்

கண்ணீர் தீரும்வரை சிந்திய அழுகை
ஜாமினில் வெளிவந்த 
தாய்மாமன் மகனுடன் வாக்கப்பட்ட கல்யாணம்

மாரியம்மன் கோவில்-
திருவிழாவிற்கு பத்துமாதத்தோடு வருகை
பெயர் தெரியாத அந்த-
 மீசையின் பழைய காதல் பார்வை

உன்னைப்போல் பெண்மை 
ஊருலகில் எத்துணையோ?
காதலுற்ற சேதியை
காதலனுக்கு சொல்லாமல் 
கணவனுக்கு சொன்னவர்கள்... #பெண்மை

#பெண்மை

7df143962119000f637d4a64dcf8669f

Baskaran Durai

விடைகொடு கல்லூரி...


ஒவ்வொரு வகுப்பிலும்
நம் காலடித்தடங்கள்..
ஒவ்வொரு மேசையிலும்
நம் பெயர்சுவடுகள்...

விடைகொடு கல்லூரி...
கனவு வளர்த்த காதல்..
கவிதை எழுதிய அனுபவம்..
கண்ணீர் விட்ட நட்பு..
காதலிக்கான காத்திருப்பு..
ஆசிரியரிடம் வாங்கிய திட்டு..
பார்த்து வைத்த காதலி..
சேர்த்து வைத்த அரியர்...
விடைகொடு கல்லூரி...

Bunking..
Birthday bumps..
Treat..
OD..
Late night wishes..
Group study..
Symposium..
இன்னும்... இன்னும்...
மின்னும்... மின்னும்..
நினைவுகள்....

நான் இறந்தாலும்
இந்த கல்லூரியிலேயே உரமாக வேண்டும்...
மீண்டும் பிறந்தாலும்
இங்கேயே மரமாக வேண்டும்... #குழந்தையின்_கிறுக்கல்கள்

#குழந்தையின்_கிறுக்கல்கள்

7df143962119000f637d4a64dcf8669f

Baskaran Durai

விடைகொடு கல்லூரி...


ஒவ்வொரு வகுப்பிலும்
நம் காலடித்தடங்கள்..
ஒவ்வொரு மேசையிலும்
நம் பெயர்சுவடுகள்...

விடைகொடு கல்லூரி...
கனவு வளர்த்த காதல்..
கவிதை எழுதிய அனுபவம்..
கண்ணீர் விட்ட நட்பு..
காதலிக்கான காத்திருப்பு..
ஆசிரியரிடம் வாங்கிய திட்டு..
பார்த்து வைத்த காதலி..
சேர்த்து வைத்த அரியர்...
விடைகொடு கல்லூரி...

Bunking..
Birthday bumps..
Treat..
OD..
Late night wishes..
Group study..
Symposium..
இன்னும்... இன்னும்...
மின்னும்... மின்னும்..
நினைவுகள்....

நான் இறந்தாலும்
இந்த கல்லூரியிலேயே உரமாக வேண்டும்...
மீண்டும் பிறந்தாலும்
இங்கேயே மரமாக வேண்டும்... #farewellfeelings ...
7df143962119000f637d4a64dcf8669f

Baskaran Durai

விதையாய் விழுந்தான்
விருட்சமாய் வளர்ந்தான்
வியர்வை சிந்தினான்
வேள்வி வளர்த்தான்
வாழ்வை வென்றான்
வையகம் கொண்டான்
வரலாறு படைத்தான்
விஜய் உன் பின்தான்-இனி
விஜய் உன் பின்தான்... Thala...

Thala...

7df143962119000f637d4a64dcf8669f

Baskaran Durai

விமர்சனக் கணைகளிலிருந்து
வில் செய்ய கற்றுக்கொள்
அவமானம்-பாராட்டின்
ஒரு வடிவம் என்பதை புரிந்துகொள்


உன்னை மதிப்பவரிடம் 
சொல்லில் பேசு
உன்னை மிதிப்பவரிடம் 
செயலில் பேசு

பின் விமர்சனம் எழுதிய
கரங்கள் உனக்கு 
மாலை சூட்டும்...
 #குழந்தையின்_கிறுக்கல்கள்

#குழந்தையின்_கிறுக்கல்கள்

7df143962119000f637d4a64dcf8669f

Baskaran Durai

சினேகிதம்...

இருளிலும் வரும் நிழல் நட்பு!..
இரவிலும் வரும் சுடர் நட்பு!...

ஓரினச்சேர்க்கைக்குள் 
உயிர் பேசும் காதல் நட்பு...

முத்தம் தவிர்த்து 
வியர்வை பருகும்
காமம் நட்பு..

சுயநலம் இல்லாத 
தாய்மை நட்பு...

எதிர்பாராமல் உதவும் 
சொந்தம் நட்பு...

நட்பு இல்லாத 
வாழ்க்கையுமில்லை...
நண்பன் இல்லாத 
வெற்றியுமில்லை...
            
                                              நட்புடன்
                                           து.பாஸ்கரன்





 #நட்பு #yqகண்மணி 
#குழந்தையின்_கிறுக்கல்கள்

#நட்பு yqகண்மணி #குழந்தையின்_கிறுக்கல்கள்

7df143962119000f637d4a64dcf8669f

Baskaran Durai

ஈகோ இல்லாத சகோவே!
ஈகை உள்ள தோழனே!
பொ'றாமை' இல்லாத நண்பனே!
பொறுமை உள்ள அன்பனே!

சுனில்-
உன்னில்
என்னில்
நம் நட்பினில்
கர்வம் Nil

நண்பனே!
சோதனைகள் இல்லாமல் சாதனையுமில்லை
வேதனைகள் இல்லாமல்
வெற்றியுமில்லை

மலராத மொட்டுமில்லை
புலராத வானுமில்லை
தளராத மனமுமில்லை
வளராத மனிதனுமில்லை

இந்த பிறந்தநாளில்
உன்னால் முடியுமென்ற 
நம்பிக்கை வை!
இன்று முதல் இலட்சியத்தோடு
அடியெடுத்து வை!
வானும்
மண்ணும் உனக்காகவே
தூவட்டும் பூவை!

7df143962119000f637d4a64dcf8669f

Baskaran Durai

மொழிநீ! மொழிநீ! -என் 
நாவில் சுவைக்கும்  தமிழ்மொழிநீ!
தோழிநீ!தோழிநீ! -வான்  
தேவதைகளின்  அழகு  தோழிநீ!
ஆழிநீ!ஆழிநீ! -  பாரதம்  
எங்கும் இருக்கும்  ஆழிநீ!
யாழினி! யாழினி! -  பரத்  
மனதில் குடிகொண்ட  தாட்சாழினி!
வாழிநீ!வாழிநீ! -  உன்  
வாழ்வில் என்னோடு  வாழியநீ!

loader
Home
Explore
Events
Notification
Profile