Nojoto: Largest Storytelling Platform
fathimaishana6464
  • 24Stories
  • 123Followers
  • 272Love
    36.2KViews

Fathima Ishana

  • Popular
  • Latest
  • Video
946718d87d38fc1b1ca207a43ab45e54

Fathima Ishana

விடை தெரியா கேள்விகளை 
இன்றும் என் உள்ளம் சுமந்து கொண்டு தான் இருக்கிறது 
தேடித் தேடிக் களைத்துப் போனேன் நான்

களைத்துப் போனது உள்ளம் 
ஓய்வை மன்றாடியது உடல் 
சற்று அயர நினைக்கும் கண்கள் 
இத்தனைகும் மத்தியில் 

தேடலில் உள்ள  சுவாரசியத்தை  இரசித்துக் கொண்டிருக்கிறது  என்  வாழ்க்கை

©Fathima Ishana தேடல்

#WinterFog

தேடல் #WinterFog

12 Love

946718d87d38fc1b1ca207a43ab45e54

Fathima Ishana

விடை தெரியா கேள்விகளை 
இன்றும் என் உள்ளம் சுமந்து கொண்டு தான் இருக்கிறது 
தேடித் தேடிக் களைத்துப் போனேன் நான்

களைத்துப் போனது உள்ளம் 
ஓய்வை மன்றாடியது உடல் 
சற்று அயர நினைக்கும் கண்கள் 

இத்தனைகும் மத்தியில் 
தேடலில் உள்ள  சுவாரசியத்தை  இரசித்துக் கொண்டிருக்கிறது  என்  வாழ்க்கை

©Fathima Ishana தேடல்

தேடல்

10 Love

946718d87d38fc1b1ca207a43ab45e54

Fathima Ishana

வாழ்க்கை எனும் நீரோட்டத்தில் 
நீந்தத் தெரியாதவளாய் நான் நிற்க 
சிறு ஓடையில் 
கைப்பிடித்து அருகிலிருந்து 
நீந்த கற்றுக் கொடுத்தாய்
இன்று பெருங்கடலில் தன்னந்தனியே விட்டு விட்டு 
கரையோரம் நின்று வேடிக்கை பார்க்கிறாய் 
அலைகளை எதிர்த்து போராடவும் 
கற்றுக் கொள் என்று

©Fathima Ishana

8 Love

946718d87d38fc1b1ca207a43ab45e54

Fathima Ishana

அப்பா என்ற சொல்லுக்கு அகராதியில் அர்த்தம் தேடி களைத்து போனேன் 
அன்பெனும் அகராதியின் முழுப் பக்கங்களுமாய் அவர் இருக்கையில்

©Fathima Ishana

9 Love

946718d87d38fc1b1ca207a43ab45e54

Fathima Ishana

மீண்டும் கனவிலும் கண்டிட கூடாது என எண்ணிய என் கடந்த காலத்தை
இன்று
சமயலறை யன்னல் வழி தெரிகின்ற 
பக்கத்து வீட்டு 
பத்து வயது சிறுமியில் காண்கிறேன் குடும்பத்தின் பசி தீர்க்க அவள் அகப்பை பிடிக்கையில்

©Fathima Ishana

9 Love

946718d87d38fc1b1ca207a43ab45e54

Fathima Ishana

கவலைகளே அற்ற 
அனுநொடிப் புன்னகையின் 
காரணம் கேட்கப்பட்டது 
இதழ் மொழிந்த ஒரே வார்த்தை 
துடைப்பதற்கு கரங்கள் இருப்பவர்கே 
கண்ணீர் சொந்தமானது

©Fathima Ishana

8 Love

946718d87d38fc1b1ca207a43ab45e54

Fathima Ishana

புத்தக மூட்டையை கீழே வைத்தது முதல் தன் குடும்பத்தை சுமக்க ஆரம்பித்தவன் திருமணம் எனும் பெயரில் இன்னுமொரு குடும்பத்தை சுமக்க ஆரம்பித்து 
தனக்கென ஒரு குழந்தை வருகையில் 
மேலும் சுமக்க ஆரம்பிக்கிறான் 
பத்து மாதம் சுமக்கும் தாயை மட்டும் 
அடிக்கடி நினைவு கூர்ந்திடும் 
உள்ளமும் உலகமும் 
இறக்க முடியாத சுமையை
 கால ஓட்டத்தின் துரத்தலில் 
ஓய்வின்றி புன்னகையுடனே
 வாழ்நாள் முழுவதும் சுமக்கும்
 தந்தையை போற்ற மறுக்கிறது

©Fathima Ishana dad

dad

11 Love

946718d87d38fc1b1ca207a43ab45e54

Fathima Ishana

யதார்தங்கள் புரிய ஆரம்பிக்கையில்
சில சோதனைகளும் சுகமான சுமையாகின்றன

©Fathima Ishana

8 Love

946718d87d38fc1b1ca207a43ab45e54

Fathima Ishana

எழுந்த முதல் முகமாய் 
உன் வருகைக்காய் பல நிமிடம் காத்திருந்து 
உன் முகம் பார்த்து 
உன் இதழ் சுவைத்து
உன்னை ரசித்து ரசித்து பருகையில் உணர்கிறேன் 
உனக்கும் எனக்குமான   
நெருக்கமான பந்தத்தை
☕

©Fathima Ishana morning tea

morning tea

11 Love

946718d87d38fc1b1ca207a43ab45e54

Fathima Ishana

கரையும் மெழுகில் இருளை கடந்து விட முடியும் என்ற நம்பிக்கை என்றும்  வாழ்க்கையிலும் இருக்கட்டும்

©Fathima Ishana #candle

9 Love

loader
Home
Explore
Events
Notification
Profile