White தொலைந்து போன கனவுகளின் சாயலின் நிழலொன்று என்னை விடாமல் துரத்தி வருகிறது பாவம் அது என்னை துரத்தி வந்து மூச்சிரைக்க என் பெயரை சொல்லி உறுதிப்படுத்திக் கொண்டு கை அசைவில் கொஞ்சம் தண்ணீர் கேட்டு நிற்க நான் அதை கொடுக்க இயலாத கையறு நிலையில் என் உயிர் என் உடலில் இருந்து வெளியேற துடிப்பதை பார்த்து அந்த நிழல் என்னை தாங்கி பிடித்து என் கரங்களில் உயிர் துறக்கும் பெரும்தன்மையை இங்கே யார் அறியக் கூடும்? #இரவு கவிதை 🍁 #இளையவேணிகிருஷ்ணா. நாள் 08/07/24/திங்கட்கிழமை. முன்னிரவு பொழுது 10:30. ©இளையவேணிகிருஷ்ணா #love_shayari