Nojoto: Largest Storytelling Platform
nojotouser4257301675
  • 153Stories
  • 18.5KFollowers
  • 14.3KLove
    24.2LacViews

இளையவேணிகிருஷ்ணா

நான் ஒரு இணைய வானொலி அறிவிப்பாளர் மற்றும் கலைகளின் ரசனையோடு வாழ்க்கை வாழ விரும்புபவர்.

  • Popular
  • Latest
  • Repost
  • Video
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

வாழ்க்கை அற்புதமானது!
இயற்கையின் பேரன்பில் 
நாம் அனைவரும் அரவணைத்து 
கிடக்கிறோம் என்று நம்புங்கள்!
அப்போது தான் வாழ்வின் அமிர்தம் 
உங்களுக்கு புரியும்!
மீண்டும் சொல்கிறேன் 
வாழ்க்கை அற்புதமானது!
நம்புங்கள் இங்கே எதுவும் 
நம்மிடம் இருந்து களவு போகவில்லை!
வாழ்வின் தேஜஸை உணரும் போது 
ஜகத்தின் பேருண்மை உங்களுக்கு புரியும்!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 31/12/24.
நேரம்: இரவின் 
மெல்லிய கைகளில் 
அடைக்கலமான போது..

©இளையவேணிகிருஷ்ணா #Likho
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

Unsplash பொழுது புலர்வதும் 
மறைவதும் இங்கே சத்தம் இல்லாமல் 
நடந்துக் கொண்டே தான் 
இருக்கிறது...
நானும் பத்தோடு பதினொன்றாக 
இல்லாமல் கூடுதல் ரசனையோடு 
இந்த இயற்கையின் 
அதீத காதலை ரசித்து 
எனது கருவியில் படம் பிடித்துக் கொண்டே
நகர்ந்து கொண்டே இருக்கிறேன்...
காலமோ என் பின்னே நீ இப்படி 
இலக்கின்றி அலைவது சரியல்ல என்று 
கூவிக் கொண்டு 
என் பின்னால் ஓடி வருவதை ரசித்து 
அதையும் என் கருவியில் அடக்கி 
உற்சாகமாக நடக்கிறேன் அந்த அடர்ந்த காட்டுவெளியில்...
இது தான் என் வாழ்வின் முடிவில்லா பயணம் 
இங்கே எனது வாழ்வின் கணக்கில் 
வருடங்கள் எங்கே என்று 
எனக்கு தெரியவில்லை... 
நீங்கள் தெரிந்தால் கண்டுபிடித்து 
என்னிடம் ஒப்படைத்துச் செல்லுங்கள் 🦋🤷
என்று கொஞ்சம் சத்தம் போட்டு அறிவித்து விட்டு
இந்த பிரபஞ்சத்தில் மெதுவாக மிதக்கிறேன்..
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் :29/12/24.

©இளையவேணிகிருஷ்ணா #snow
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

White ஒன்றும் இல்லை என்று 
ஒரே சொல்லை சொல்லி சொல்லி 
ஆயிரம் யுகங்களை 
கடந்து விட்டேன்...
அந்த ஒரு சொல்லை 
நான் மறந்து இருந்தால் 
இன்று நான் ஒரு அபூர்வ உலகத்தை 
சிருஷ்டித்து இருந்திருக்கக் கூடும்...
அங்கே எந்தவித கல்மிஷமும் இல்லாத 
மனிதர்கள் இருந்திருக்கக்கூடும் என்றேன் 
அந்த காலத்திடம்...
காலமோ அதை விட இது தான் உனது 
ஆழ்ந்த துக்கத்தின் கீறல்களாக 
நான் உணர்கிறேன்...
இதோ பார் உனது துக்கத்தின் கீறல்கள் 
எனக்கு ஏற்படுத்திய வலியின் இரத்த கசிவு 
இன்னும் நிற்காமல் என் உடல் எங்கும் பயணிக்கிறது என்று என்னிடம் 
அதன் உடலை காட்டிய போது 
நான் விம்மி விம்மி அழுது அந்த காலத்தின் தோளில் சாய்கிறேன்...
அந்த காலமோ என்னை மிருதுவாக 
அதன் இரு கைகளால் அணைத்தது 
பெரும் காதலோடு மௌன மொழியில் 
ஆறுதல் சொன்னது...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 26/12/24.

©இளையவேணிகிருஷ்ணா #Sad_Status
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

Unsplash எந்தவித வாசிப்பும் இல்லாமல் 
அந்த அபூர்வ மனிதனின் 
வாழ்வின் புத்தகத்தின் பக்கங்கள் 
வாசனை மாறாமல் என்னை ஒரு 
ஏக்க பார்வை பார்த்து 
பெருமூச்சு விடும் 
அந்த சப்தத்தில் இந்த பிரபஞ்சத்தின் நடுக்கத்தை 
உணர்ந்த அந்த காலமோ 
ஓடோடி வந்து என் கைகளில் 
அந்த புத்தகத்தை திணித்து விட்டு 
செல்கிறது...
நான் வரும் வரையில் 
இந்த புத்தகத்தின் வாசத்தையும் கூட 
எவரிடமும் நுகர விடாதே என்று சொல்லி விட்டு 
வேகமாக என்னை விட்டு நகர்கிறது...
நானோ செய்வதறியாது திகைத்து நிற்கும் சமயத்தில் அந்த புத்தகத்தை எவரோ அபகரித்து ஓடுவதில் நான் மூர்ச்சையாகி கிடக்கிறேன்...
அந்த காலமோ எனை பரிதாபமாக பார்த்து விட்டு 
அந்த புத்தகத்தின் அடையாளமான 
அந்த அபூர்வ மனிதனை 
தேடி இங்கும் அங்கும் அலைவதை 
நான் சூட்சமமாக வேடிக்கை பார்க்கிறேன் 
யார் அந்த அபூர்வ மனிதராக இருப்பார் என்று 
எண்ணியபடி...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 25/12/24.

©இளையவேணிகிருஷ்ணா #library
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

White அந்த கண்ணாடி டம்ளரில் 
பொங்கி வழிந்து குதூகலித்து
எனை சீண்டல் பார்வையில் 
பெரும் போதையூட்டி
அழைக்கிறது வோட்கா!
நானும் என்னை கொஞ்சம் 
ஆசுவாசப்படுத்திக் கொள்ள 
மிடறு மிடறாக பருகி 
அதனிடம் காதல் மொழிகளை பேசி 
சரிகிறேன்...
என் மீது வழிந்தோடும் அந்த திரவமோ 
இது போல பல ஆயிரம் கதைகளை 
கேட்டும்  சலிக்காமல் 
என் கன்னத்தில் 
ஒரு பெரும் முத்தத்தை 
கொடுத்து அதன் மடியில் 
உறங்க செய்து அந்த இரவை 
கண்ணீரில் நனைத்து 
எனக்காக பிரார்த்தனை செய்து 
என்னை அரவணைத்து விடியும் நேரத்தில் 
கொஞ்சம் கண்ணயர்ந்து துயில் கொள்கிறது!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 24/12/24.

©இளையவேணிகிருஷ்ணா #GoodMorning
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

தேடிக் கொண்டு இருக்கிறேன் 
நான் அந்த காலத்தில் மென்று தின்று 
சக்கையாக துப்பிய அந்த நாட்களை!
இன்னும் ஒரு சிறு துளி மிச்சமாக 
அந்த சக்கையில் ருசி ஏதும் மிஞ்சி 
நான் சுவைப்பதற்காக காத்திருக்கிறதா என்று 
பெரும் ஏக்கத்தோடு!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 24/12/24/அந்தி மயங்கும் வேளையில்.

©இளையவேணிகிருஷ்ணா #bekhudi
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

White கொஞ்சமும் சோர்வில்லாமல்
புத்துணர்ச்சியோடு
ஓடிக் கொண்டே இருக்கும் 
என் சாயலில் பயணிக்கும் 
காலத்தை நான் கொஞ்சம் ஆச்சரியமாக 
வேடிக்கை பார்த்து 
சிலை போல நகராமல் 
அந்த நெடுஞ்சாலையின் 
நடுவில் நிற்கிறேன் ...
என்னை கடந்து செல்லும் 
காலமெனும் வாகனத்தில் 
பயணம் செய்பவர்கள் ஏதேதோ 
எனை ஏசி விட்டு செல்கிறார்கள் என்று 
என்னிடம் கிசுகிசுத்து நகர்கிறது 
அந்த கால் இல்லாத காலம்...
நானோ இரு கால்கள் இருந்தும் 
ஊனமாகி முடங்கி கிடக்கிறேன் 
அந்த சாலையில்...
இங்கே நிஜமெது நிழலெது??
கொஞ்சம் புரிந்தவர்கள் சொல்லி விட்டு 
என்னை சாலையின் மறு பக்கத்தில் 
சேர்த்து விட்டு செல்லுங்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 22/12/24/ஞாயிற்றுக்கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #good_night
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

Unsplash எப்படியும் ஒரு நிகழ்வு நடந்த பிறகு 
இன்னொரு நிகழ்வு நடக்கத்தான் போகிறது 
அதை முன்பே அறிந்துக் கொள்ள 
ஏன் அவ்வளவு துடிக்கிறீர்கள்?
அதை முன்பே அறிந்துக் கொண்டால் மட்டும் 
உங்களுக்கு சாதகமாக 
முடிந்து விடப் போகிறதா என்ன?
அந்த நிகழ்வு உங்களுக்கு என்ன தர விரும்புகிறதோ அதை அது செவ்வனே 
நிகழ்த்தி விட்டு அது பாட்டுக்கு எந்தவித சலனமும் இல்லாமல் பயணித்து விடும்...
நீங்கள் ஏன் வீண் சஞ்சலம் கொண்டு 
அதனோடு சண்டையிட 
பெரும் கோபங்கொண்டு 
அதை துரத்தி  செல்கிறீர்கள்?
அதை அப்படியே விட்டு விட்டு 
நீங்களும் சலனம் இல்லாமல் 
பயணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!
அது தான் பேரமைதி வாழ்வின் யாத்திரை!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 18/12/24/புதன் கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #camping
loader
Home
Explore
Events
Notification
Profile