உன் காந்த விழி கண்களதில் அரும்பாகி மொட்டு விட்டு முகையெடுத்து செம்மலாய் என் காதலது கம்பீரமாய் பூத்து நிற்குதடி.. உன் புன்னகை உதிர்க்கும் செவ்விதழ் அமுதமதை உரமாய் உறிஞ்சியே இந்த ஒற்றை பூச்செடியும் பூந்தோட்டமானதடி.. உன் மனம் வீசும் திசையெல்லாம் என் காதல் மகரந்தம் நிரவியே பிரபஞ்சம் மொத்தமும் நந்தவனமானதடி.. நந்தவனமும் நானும் தனியே தவித்தே காத்திருக்கிறோமடி.. உனக்காய் மலர்ந்த மலர் அத்தனையும் நித்தம் பறித்து உன் கூந்தலில் பதித்து இருக்கமாய் கட்டியனைத்து பிரபஞ்சமே அலரும் படி உறக்க சொல்லனுமடி... விரும்புகிறேன் உனையென்று விரைந்து வா என் வசந்தமே.......!!! கண்ணீர் கவிதையின் காதலன் ❤️ Pearlskumar ❤️ ©pearls kumar #brokenlove #கண்ணீர்கவிதையின்காதலன் #Pearlskumar #love