Unsplash பொழுது புலர்வதும் மறைவதும் இங்கே சத்தம் இல்லாமல் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது... நானும் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் கூடுதல் ரசனையோடு இந்த இயற்கையின் அதீத காதலை ரசித்து எனது கருவியில் படம் பிடித்துக் கொண்டே நகர்ந்து கொண்டே இருக்கிறேன்... காலமோ என் பின்னே நீ இப்படி இலக்கின்றி அலைவது சரியல்ல என்று கூவிக் கொண்டு என் பின்னால் ஓடி வருவதை ரசித்து அதையும் என் கருவியில் அடக்கி உற்சாகமாக நடக்கிறேன் அந்த அடர்ந்த காட்டுவெளியில்... இது தான் என் வாழ்வின் முடிவில்லா பயணம் இங்கே எனது வாழ்வின் கணக்கில் வருடங்கள் எங்கே என்று எனக்கு தெரியவில்லை... நீங்கள் தெரிந்தால் கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைத்துச் செல்லுங்கள் 🦋🤷 என்று கொஞ்சம் சத்தம் போட்டு அறிவித்து விட்டு இந்த பிரபஞ்சத்தில் மெதுவாக மிதக்கிறேன்.. #இளையவேணிகிருஷ்ணா. நாள் :29/12/24. ©இளையவேணிகிருஷ்ணா #snow