ஆலமரம் அசைந்தாடி அழைக்கின்றன தென்றல் காற்று மிருதுவாய் தழுவுகின்றன கோயில் கோபுரம் உயரத்தில் ஆசிர்வதிகின்றன என்னைத் தாலாட்டி வளர்த்த தறி ஓசை என்னை ஆரவாரத்தோடு வரவேற்கின்றன வீட்டுக்கு வீடு பந்தமாய் ஊரே சொந்தமாய் பால்க்காரர் முதல் மளிகைக் கடைக்காரர் வரை அண்ணா அக்கா மாமா என உறவுகளாய் ஒவ்வொரு எட்டுக்கும் எட்டு திக்கிலிருந்து உவகையுடன் விசாரிப்புகளோடு வரவேற்க மண்ணின் வாசனையோடு தென்றல் தழுவ என் கால்கள் முன்னேறி நடக்க என் நினைவுகள் பின்னோக்கி நடக்கின்றன வயல்வெளி நான் வளர்ந்த கதைகளை பேசிற்று வீதிகள் விளையாடிய நாட்களை நினைவூற்றிற்று மைதானம் என்னுடனான தோழர்களை தேடிற்றுற்று பள்ளி என் பருவ காலங்களைப் பறைசாற்றிற்று இவ்வாறான பசுமையான நினைவுகளில் குதூகலிக்கும் நான் !!! மீண்டு வந்த நானாகிய நான் !!! சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊர்ப் போல வருமா ….!!!! - ஜீவந் #என்ஊர் #ஜீவந் #தமிழ்கவிதைகள் #tamilquotes