White ஒன்றும் இல்லை என்று ஒரே சொல்லை சொல்லி சொல்லி ஆயிரம் யுகங்களை கடந்து விட்டேன்... அந்த ஒரு சொல்லை நான் மறந்து இருந்தால் இன்று நான் ஒரு அபூர்வ உலகத்தை சிருஷ்டித்து இருந்திருக்கக் கூடும்... அங்கே எந்தவித கல்மிஷமும் இல்லாத மனிதர்கள் இருந்திருக்கக்கூடும் என்றேன் அந்த காலத்திடம்... காலமோ அதை விட இது தான் உனது ஆழ்ந்த துக்கத்தின் கீறல்களாக நான் உணர்கிறேன்... இதோ பார் உனது துக்கத்தின் கீறல்கள் எனக்கு ஏற்படுத்திய வலியின் இரத்த கசிவு இன்னும் நிற்காமல் என் உடல் எங்கும் பயணிக்கிறது என்று என்னிடம் அதன் உடலை காட்டிய போது நான் விம்மி விம்மி அழுது அந்த காலத்தின் தோளில் சாய்கிறேன்... அந்த காலமோ என்னை மிருதுவாக அதன் இரு கைகளால் அணைத்தது பெரும் காதலோடு மௌன மொழியில் ஆறுதல் சொன்னது... #இளையவேணிகிருஷ்ணா. நாள் 26/12/24. ©இளையவேணிகிருஷ்ணா #Sad_Status