வீட்டில் ஆங்காங்கே ஒளிந்திருந்த நெகிழிகளையும் கழித்தாகி விட்டது ! புதுமையான மாற்றுப் புகுதலுடன் பொழிவுடன் இயற்கை நோக்கியப் பயணம் தொடங்கியது இப்போகியில் இருந்து ! வணக்கம் தோழமைகளே! பொங்கல் கொண்டாட்டங்கள் எப்படி போயிட்டு இருக்கு? மார்கழி மாதத்தின் இறுதிநாளில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், இந்த போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.