Nojoto: Largest Storytelling Platform

காரிருளில் தனியே உலாவரும் நீ பாரிருளில் வெளியே வல

காரிருளில் தனியே
உலாவரும் நீ 
பாரிருளில் வெளியே
வலம்வரும் நீ 
ஆணா ?? பெண்ணா ?
உந்தன் பால் என்னவோ ?

வானில் தவழும்
பால் மேனியுடைய
பச்சிளம் குழந்தை அவள் !

நிகரில்லா அழகிற்கு
என்றுமே சொந்தமான
காரிருள் கன்னி அவள் !

கவிபாடும் கவிஞர்க்கு
அம்சமாய் கிடைத்த
முதல் காதலி அவள் !

அன்னமூட்டும் அன்னைக்கு
அதிசயத்தின் ஓவியமாய்
இரவின் தோழி அவள் !

துன்பத்தில் வாடுபவர்க்கு
அன்பின் உருவாய் 
தாலாட்டும் தாய் அவள் !

கனவுகள் பூக்கும் வேளையில்
தினம்தினம் வரும் 
தேவதை
நிலா !!




கவிபாடும் கவிஞருக்கு
அழகின் அம்சமாய்
உவமையின் காதலி நீ !

அன்னமூட்டூம் அன்னைக்கு
அதிசியத்தின் ஓவியமாய்
இரவின் தோழி நீ !

பாசப்பிரிவில் வாடுபவருக்கு
அன்பின் உருவமாய்
தாலாட்டும் தாய் நீ !

அறிந்தேன் தெளிந்தேன்
காரிருளில் தனியே
உலாவரும் நீ 
பாரிருளில் வெளியே
வலம்வரும் நீ 
பெண் நிலவே !!
பெண் நிலவே !!

 

-ஜீவந்

 Nila
காரிருளில் தனியே
உலாவரும் நீ 
பாரிருளில் வெளியே
வலம்வரும் நீ 
ஆணா ?? பெண்ணா ?
உந்தன் பால் என்னவோ ?

வானில் தவழும்
பால் மேனியுடைய
பச்சிளம் குழந்தை அவள் !

நிகரில்லா அழகிற்கு
என்றுமே சொந்தமான
காரிருள் கன்னி அவள் !

கவிபாடும் கவிஞர்க்கு
அம்சமாய் கிடைத்த
முதல் காதலி அவள் !

அன்னமூட்டும் அன்னைக்கு
அதிசயத்தின் ஓவியமாய்
இரவின் தோழி அவள் !

துன்பத்தில் வாடுபவர்க்கு
அன்பின் உருவாய் 
தாலாட்டும் தாய் அவள் !

கனவுகள் பூக்கும் வேளையில்
தினம்தினம் வரும் 
தேவதை
நிலா !!




கவிபாடும் கவிஞருக்கு
அழகின் அம்சமாய்
உவமையின் காதலி நீ !

அன்னமூட்டூம் அன்னைக்கு
அதிசியத்தின் ஓவியமாய்
இரவின் தோழி நீ !

பாசப்பிரிவில் வாடுபவருக்கு
அன்பின் உருவமாய்
தாலாட்டும் தாய் நீ !

அறிந்தேன் தெளிந்தேன்
காரிருளில் தனியே
உலாவரும் நீ 
பாரிருளில் வெளியே
வலம்வரும் நீ 
பெண் நிலவே !!
பெண் நிலவே !!

 

-ஜீவந்

 Nila