White உயிரை அறுத்து கையில் கொடுத்தாலும் சிலருக்கு செல்லா காசை சேமிக்க கொடுத்தது போல் தெரியும்! ஆயிரமே அன்பை அள்ளிக் கொடுத்தாலும் கொடுப்பவர் இங்கு கொடை வள்ளல் என கொண்டாடப் பட போவதில்லை! பணத்தை எடை போடும் மனித தராசுகளுக்கு அன்பை பணத்திற்கு நிகராய் சமயெடை போடச் சொன்னால் தராசின் பணத் தட்டு கனத்த எடையோடு தரை தொட்டுத் தான் நிற்கும் !! பாசம் வைத்த தட்டு அந்தரத்தில் தான் ஆடும் செல்லா காசு தான் என்று எவரும் தேவை முடியும் வரை சொல்வதில்லை! சொல்லாமலே காட்டி விட்டு போவார்கள் அன்பு என்றுமே செல்லா காசு தான்!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #flowers #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #காதல்கவிதை