Nojoto: Largest Storytelling Platform
umamaheswari4208
  • 394Stories
  • 351Followers
  • 5.7KLove
    18.3KViews

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

இவள் அந்தமான் பெண்மணி. கவிதை எழுதுவது பிடித்த விசயம் அன்பிற்கு அடங்குவேன் . ஆணவன் கண்டு அலட்டிக் கொள்ள மாட்டேன்.

  • Popular
  • Latest
  • Video
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White அவளுக்கு அவளையே
 புரிந்து கொள்ள சிரமம் போல.. 
விழுந்து, விழுந்து சேவை செய்கிறாள்! 
வீண் வார்த்தைகளால் நோகடிக்கிறாள்! 
பாரமான உறவெனவே தான் பெற்றவர்களையே கருதுகிறாள்! வருத்தங்களை எல்லாம்..
வார்த்தைகளால் உளறி கொட்டுகிறாள்! மாற்றுக் கருத்து எவரும் சொன்னால்
ஜென்ம விரோதிகளாய் .
பாவித்துக் கொள்கிறாள்!! அத்தனையும் அவளின் பாசம் தான்! 
எதிர்பார்ப்புகளை ஏராளமாக
 வைத்து விட்டாள் அதுவும் 
ஏமாற்றமாய் போனதில்.. அவள்
 ஏக்கம் யாவும் தாக்கும் ஆயுதமாய் ஆற்றாமைகளை தீர்த்துக் கொள்கிறாள்!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #lonely_quotes
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White பிறர் காலடியில் வீழ்ந்து கிடப்பதற்கு
மாண்டு போவது மேல்! 
பணிவு வேண்டும் பக்குவமும் வேண்டும்! 
தூய்மையான மனமிருந்தால்
துணிவும் இருந்தாக வேண்டும்! 
விமர்சனம் வரத்தான் செய்யும்! 
முதுகிற்கு பின் பேசவும் செய்வார்கள்
குத்தவும் செய்வார்கள்! காரணம் நீ அவர்களுக்கு முன் இருக்கிறார்
ஏதோ ஒரு முயற்சியில் முன்னேறுகிறாய்! 
அதை எட்டித் தொட முடியாதவர்கள்
தட்டி விட பார்ப்பதும்.. 
வெட்டிக் கதை பேசுவதும்.. 
உன்னை கொட்டி வஞ்சம் தீர்ப்பதும்
நீ முன்னேறும் பயணத்தை 
முறியடிக்கும் யுக்தி தான்! 
புறம் பேசுபவர்களை புறம் தள்ளி பயணப்பட்டுக் கொண்டேயிரு! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #sad_shayari #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #கவிதை #கவி_வனம்

sad_shayari #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #கவிதை #கவி_வனம்

11 Love

772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White உயிரை அறுத்து கையில் கொடுத்தாலும்
சிலருக்கு செல்லா காசை
 சேமிக்க கொடுத்தது போல் தெரியும்! 
ஆயிரமே அன்பை அள்ளிக் கொடுத்தாலும்
கொடுப்பவர் இங்கு கொடை வள்ளல் என கொண்டாடப் பட போவதில்லை! 
பணத்தை எடை போடும் மனித 
தராசுகளுக்கு அன்பை பணத்திற்கு 
நிகராய் சமயெடை போடச் சொன்னால் தராசின்  பணத் தட்டு கனத்த எடையோடு  தரை தொட்டுத் தான் நிற்கும் !!
பாசம் வைத்த தட்டு அந்தரத்தில் தான் ஆடும் 
செல்லா காசு தான் என்று எவரும் 
தேவை முடியும் வரை சொல்வதில்லை! 
சொல்லாமலே காட்டி விட்டு போவார்கள் அன்பு என்றுமே செல்லா காசு தான்!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #flowers #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #காதல்கவிதை

#flowers #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #காதல்கவிதை

11 Love

772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White உறவென்றும்..நீயே..
என் உயிரென்றும் சொல்லுவதில் 
உண்மை இல்லை! 
அதை உயர்வென்றும் உரிமை என்றும்
 உரிய இடத்தில் ஊர்ஜிதம் செய்ய தயங்குவதில் உணர்ந்து கொள்ளலாம்! 
உனக்காக உயிரையே தருவேன் என சொல்பவர்கள் பலர் இதயத்தில் இல்லாததையே இருப்பதைப்போல் காட்டுவார்கள்! 
அவர்களின் மனதில் நாம் எந்த 
இடத்திலும் இருப்பதாய் காட்டிக் 
கொள்ளவே மாட்டார்கள்! 
ஆக.. வார்த்தைகளில் கூறுவதானால் வாழ்க்கை முழுவதும் கூட 
வருவதாய் அர்த்தம் ஆகாது!! 
இவள்.. 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #sad_quotes #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம்

sad_quotes #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம்

14 Love

772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White வாழும் போதே... 
வாழ்க்கை இருக்கும் போதே.. 
ஒருமுறை ஏனும் வாழ்ந்து விடுங்கள் !! 
அது எதுவாயினும் உயிர்ப்போடு வாழ பழகுங்கள் ! 
அடுத்த நொடியே. 
எதுவும் மாறலாம் 
மறையலாம்
ஏன் நாமே மரணித்தும் போகலாம்! 

எதுவும் நம் கையில் இல்லை! 
வாழ்வதை தவிர.. 
வாழ்ந்து தான் பார்ப்போமே!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #Sad_shayri #தமிழ்

#Sad_shayri #தமிழ் #கவிதை

11 Love

772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White உறவுகள் பேசிய வார்த்தை 
ஆழமாய் தைத்து விட்டால்.. 
அந்த உறவை விட்டு தள்ளியே இருங்கள்!! இல்லை ... 
சொற்களை விட சொந்தம் பெரியதெனில் வார்த்தைகளை விட்டு விடுங்கள்! 
மனக் கசப்போடு எந்த உறவுமே.. 
மகிழ்ச்சி தராது!! 
அதி  வீரிய சொற்களை கொட்டினாலும்..
உறவு ஆலமரம் போன்றது! 
வேரை விட்டு விலகினால் ..
வெறும் மரக்கட்டை தானே! 
தென்னங்கீற்றை கிழித்து 
சேர்த்துக் கட்டினால் குப்பைகளை..
எல்லாம் கூட்டி சேர்க்கலாம்! அதில்
கட்டை விட்டு குச்சியொன்று 
பிரிந்து விழுந்தால் அதுவும் 
குப்பையில் தானே போய் சேரும்!!
புரிந்தால் நலம்
இவள்.. 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #sad_shayari #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #காதல்

sad_shayari #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #காதல்

10 Love

772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White கத்தி அழத் தோணும்! 
பல நேரங்களில் கூர் கத்தியெடுத்து
 கொன்று போடத் தோணும்! 
என் நிலை கண்டு கொக்கறிக்கும் 
குருட்டு சேவலை எல்லாம்
குலதெய்வ கோயிலில் பலியிட தோணும்;
 பேய்களின் மத்தியில் போராடும் என்னைக் கண்டு எனக்கே ..
காறி உமிழ தோணும்! 
பொய் குப்பை மேடுகளில் சிக்கி ..
மெய்யெனும் நொண்டி எறும்பு ..
ஊர்ந்து நகர்ந்த
 என் மேனியில் பொய்கள் எல்லாம் மெய்யென  ஒட்டி புழுதி கோபுரமாகும்! கொப்பளிக்கும் என் உண்மை கோபம் ..
தோற்று போய் குமுறி அழும் போது ..
போதும் இந்த மெய் பேய் ஆட்டம் ;
வேப்பிலை அடித்து விபூதி பூசி 
விரட்டி அடிக்கத் தோணும்
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #flowers #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதை #காதல் #காதல்கவிதை #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தகவல்கள்

flowers #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதை #காதல் #காதல்கவிதை #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தகவல்கள்

9 Love

772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White உரிமையோடு திட்டுபவர்களின்
உறவை முறித்துக் கொள்ளாதீர்கள்! 
அக்கறையுடன் தட்டிக் கேட்டால்.. 
அவமானம் என்று எண்ணாதீர்கள்! 
வியாபாரச் சந்தையில் தான்..
நாமெல்லாம் விழி பிதுங்கி வாழ்கிறோம்! 
விலை போய் விடக்கூடாது என்பதில் ..
அதீத கரிசனம் தான் உங்கள் மீது அவர்களுக்கு! 
கட்டி எழுப்பியவனுக்குத் தான் ,
மாளிகை கோயிலாய் தெரியும்! 
அது உயர்வதைக்கண்டு பூரிப்பு கொள்ளும்! 
வழிப் போக்கனுக்கு அது வெறும் 
கல்லும் சாந்தும் கலந்த ஒரு 
கட்டிடமாகத் தான் தெரியும்! 
பாடு பட்டு எழுப்பிய கோபுரத்தில் 
எருமைக்கு கட்டில் போட்டு கொடுத்தால் அதன் அருமையாத் தெரியும் அதற்கு! 
வீடு கோயிலாகவும், அதில்  வாழும் 
உயிர்கள் எல்லாம் சாமியாகவும் 
வாசம் செய்ய வேண்டும் ..
வாழையடி வாழையாய் வம்சம் தழைக்க வேண்டும் என்பதற்கு தானே இத்தனை பாடுகளும்!!
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #love_shayari #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தகவல்கள் #வாழ்க்கை

love_shayari #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தகவல்கள் #வாழ்க்கை

12 Love

772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White அவரவர் விருப்பத்திற்காகவும்.. 
தேவைகளுக்காகவும்.. 
நட்பு பாராட்டுகிறார்கள்! 
தேவை தீர்ந்ததும்
வெறுப்பைக் காட்டி தானே விலகுகிறார்கள்! 
அவரவர் மன அமைதிக்கு குற்றமும் குறையும் சொல்லி செல்கிறார்கள்! 
தவறேதும் செய்யாது தவிப்பது
 நாமாகவே இருப்போம்!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #good_night #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தகவல்கள் #வாழ்க்கை

good_night #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தகவல்கள் #வாழ்க்கை

16 Love

772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White உங்கள் இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்!! 
அது துடிக்கும் வரை தான் நாம் 
உயிரோடு இருக்க முடியும்! அது 
கைவிட்டால் மட்டுமே நாம் உலகை விட்டு போவோம்! 
உன்னோடு எவரும் உடன் இருக்கவோ
 உடன் வரவோ போவதில்லை! 
இது தான் நிதர்சனம்!! 
உன் இதயக்கூட்டை பிறருக்கு 
வாடகை கூடாராமாய்  ஆக்குவது 
சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டில் குடி போவதற்கு சமம் !!
எந்த தருணத்திலும் குடிசையின்றி
 தெருவில் நிற்கும் சமயம் வரும்! ஆக.. 
எதன் காரணமாகவும் இதயத்தை 
இரவலுக்கு தந்து விடாதீர்கள்! 
உன் இதயம் மட்டுமே  இரும்புக் கோட்டை !!
உன் உயிர் காப்புக்கு உற்ற தோழமைக்கு உண்மையான வழித் துணை 
வாழ்க்கை முழுவதற்கும்!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #emotional_sad_shayari #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தகவல்கள் #வாழ்க்கை

emotional_sad_shayari #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தகவல்கள் #வாழ்க்கை

12 Love

loader
Home
Explore
Events
Notification
Profile