பெண்ணின் முக வரைபடம்..😊 காலை வணக்கம்! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் என்று கொண்டாடப்படுகிறது! 1956 ஆம் ஆண்டில், ‘மாநில மறு சீரமைப்புச் சட்டம்’ உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் 1956 ஆம் ஆண்டின் நவம்பர் 1 ஆம் தேதி ஆந்திரா, கர்நாடகா, கேரளம் ஆகிய மாநிலங்களோடு தமிழகமும் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் தெற்கு எல்லையும், சங்ககாலத்தில் இருந்து தமிழகத்தின் தெற்கு எல்லையுமான கன்னியாகுமரி இந்நாளில்தான் தமிழகத்துடன் மீண்டும் இணைந்தது. இந்த இணைப்பு மட்டும் நடக்காமல் போயிருந்தால் மூவேந்தர்களில் சேரர்கள் ஆண்ட நிலப்பரப்பை நாம் கேரளாவிடம் முற்றிலுமாக இழந்திருப்போம். அந்த அடிப்படையில் மீண்டும் ஒன்றுபட்ட தமிழகம் உருவான நாள் இந்த நவம்பர் 1ஆம் தேதிதான்.