White கடந்து சென்ற பாதையை பற்றி சிறிதும் நினைவில் இல்லை.. நினைவிருத்த தேவையுமில்லை! எதிரே இருக்கும் பாதையின் நீட்சியின் சூட்சமங்கள் புரியவில்லை.. புரிந்துக் கொள்ள அவசியமும் எனக்கு இல்லை... இந்த இரண்டிற்கும் இடையே என் கால்கள் முத்தமிடும் இதோ இப்போதைய சாலை எனை நகர்த்தி செல்கிறது... அங்கே சாலையின் முடிவில் காலம் ஒரு சிறு குழந்தையின் வடிவில் எனை அணைத்து தோளில் சாய்த்து ஒரு சூட்சம உறக்கத்திற்கு அழைத்துச் செல்லும் நாளில் நான் சுகமாக உணரும் தருணத்தில் நான் நடந்து வந்த பாதையின் கதையை அங்கே யாரோ யாரோடோ விவாதிக்கும் போது மட்டும் நான் சுமையாகி கணக்கிறேன் அந்த காலத்தின் கைகளில்.... #இரவு கவிதை 🍁 #இளையவேணிகிருஷ்ணா. நாள்:17/07/24/புதன் கிழமை. முன்னிரவு பொழுது 10:48. ©இளையவேணிகிருஷ்ணா #sad_shayari