எங்கோ இருந்தாலும்...!! எங்கோ இருக்கிறாய் என்னை வதைக்கிறாய்! எண்ண அலைகளால் என்னை சுழற்றி அடிக்கிறாய்! யாரோ நீ யாத்திரை சிநேகிதன் போல் யாசக சாரலை விழிகளில் ஒட்டிப் போனது! நெடுஞ்சாலை பயணம் போல் நீளும் நினைவுகளை சாலையோர பூக்களைப் போல் சத்தமின்றி சருகுகளாகி சாந்தம் கொள்ளும் சந்தர்ப்பங்கள் சங்கமிக்கும் போதெல்லாம் இந்த நெடுஞ்சாலையில் என் ஜன்னலோரப் பயணம்!! இவள்.... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #agni #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #வாழ்க்கை #காதல் #காதல்கவிதை