White அப்படி ஒன்றும் மார்கழியை கொண்டாட எனக்கு அதில் எதுவும் தற்போது இருப்பதாக தெரியவில்லை! கடும் குளிரின் தாக்கத்தில் போர்வைக்குள் அந்த மிதமான வெப்பத்தையும் ஊடுருவ துடிக்கும் இதமான குளிரையும் ரசிப்பதை நிறுத்தி விட்டு அந்த குளிரில் எழுந்து ஏதேதோ செய்து நான் ஒரு ஒழுங்கான தெய்வீக மனுஷி என்று நிரூபிக்க தற்போது மனமில்லை ஒரு தெளிவான அதீத ரசனையை தவிர எனக்கு இங்கே எதுவும் ஆனந்தத்தை கொடுத்து விடப் போவதில்லை என்று தீவிரமாக நம்பும் சாதாரண மனுஷி நான் அவ்வளவு தான்! #இளையவேணிகிருஷ்ணா. நாள் 18/12/24/புதன்கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா #GoodMorning