பணம் பின் ஓடும் பாமரரும் பட்டம் தேடும் பண்டிதரும் பதவி நாடும் கோமகனும் எதும் இன்றி தவிக்கும் எளியவரும் உதவாது இருக்கும் வலியவரும் இறுதியில் இறக்கும் யாரானாலும் மண்ணிற்கு உள்புதைந்து மண்ணாகி உணவாகும், உரமாகி போகும் உணவளித்த மண்ணிற்கு வணக்கம் தோழமைகளே! இன்னிக்கு புதுசா ஒரு கவிதை சவால் - அதாவது எழுதும் வகை! 333 வகையில் பல முறை எழுதி இருப்பீர்கள். அதிலே ஒரு சிறிய மாற்றம்! இடமிருந்து வலம் படித்தாலும் ஒரு முழு கவிதையாக / பதிவாக இருக்க வேண்டும்.