வந்தாரை வாழ வைக்கும் சிங்காரி நீ! உழைப்போர்க்கு உயர்வு கொடுக்கும் ஒய்யாரி நீ ! கல்லூரி காலங்களின் கனவில் இருந்து வெளியே வந்தவளை நிதர்சன உலகிற்கு வரவேற்றவள் நீ ! என் வாழ்வின் முக்கியமான தருணங்களில் எனக்கு உறுதுணையாய் இருந்தவள் நீ ! பிறந்த ஊரை அடுத்து என் மனதில் நீங்கா இடம் பிடித்து சிம்மாசனம் போட்டு அமர்ந்தவள் நீ ! பாசமிகுந்த பலரின் அறிமுகம் பெற்று வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிய பல நல்லுள்ளங்களை பரிசளித்தவள் நீ ! உன்னை பிரிய மனமில்லை என்றாலும் பிரிந்தாக வேண்டிய சூழ்நிலை. கொரானா விடைபெற்று சென்ற பின் காலம் கனிந்தவுடன் சீக்கிரமே உன்னை வந்தடைய வேண்டுகிறேன் ! அதுவரையில் உந்தன் நினைவலைகளில் நனைந்து கொள்கிறேன். நன்றி சென்னையே . மிக்க நன்றி. விரைவில் சந்திப்போம். !! - ஜீவந்த் #ஜீவந்த் #விடைபெறுகிறேன் #விடைபெறுகிறேன்சென்னை #byebyechennai #byebye