Nojoto: Largest Storytelling Platform

கனவுகளால் ஊதிய பலூன் போல் விண்ணுக்கும் மண்ணுக்கும

கனவுகளால் ஊதிய பலூன் போல் 
விண்ணுக்கும் மண்ணுக்கும் நடுவாய் பறப்பவன்.

கடன்கள் சேர படித்து முடித்து 
கண்கள் பிதுங்க வேலைத் தேடி 
கண்ணீருடன் ஊரை உறவை விட்டு 
கார்பரேட்டின் ஆடுபுலி ஆட்டத்துக்கு நடுவே 
கனவுகளை எட்டி பிடிக்க முயலுபவன்.

குடும்பக் கடமைகள் ஒருபுறம் இருக்க 
சமூகக் கொடுமைகள் மறுபுறம் இருக்க 
இரண்டையும் சகித்த வண்ணம் 
உலகுக்காக நாகரிக உடை அணிந்தும்
உறவுக்காக பலதேசம் பணிபுரிந்தும் 
லோன் ,இ எம் ஐ ,பி.எப் .,டேக்ஸ் போக 
ஊதியத்தில் மிச்சம் பிடித்து 
முட்டி மோதி முன்னேறத் துடிப்பவன் .

இத்தனை இடர்களிலும்
இப்பகட்டான உலகில்
படாதபாடுபட்டு பட்டுவாடா செய்பவன்.

அவன்தான் மலைக்கும் மடுவுக்கும் 
இடையே சிக்கித் தத்தளிக்கும் 
மிடில் கிளாஸ் ஆண்மகன் !!

                                            -ஜீவந் #ஜீவந் #ஆண்கள் #middleclass
கனவுகளால் ஊதிய பலூன் போல் 
விண்ணுக்கும் மண்ணுக்கும் நடுவாய் பறப்பவன்.

கடன்கள் சேர படித்து முடித்து 
கண்கள் பிதுங்க வேலைத் தேடி 
கண்ணீருடன் ஊரை உறவை விட்டு 
கார்பரேட்டின் ஆடுபுலி ஆட்டத்துக்கு நடுவே 
கனவுகளை எட்டி பிடிக்க முயலுபவன்.

குடும்பக் கடமைகள் ஒருபுறம் இருக்க 
சமூகக் கொடுமைகள் மறுபுறம் இருக்க 
இரண்டையும் சகித்த வண்ணம் 
உலகுக்காக நாகரிக உடை அணிந்தும்
உறவுக்காக பலதேசம் பணிபுரிந்தும் 
லோன் ,இ எம் ஐ ,பி.எப் .,டேக்ஸ் போக 
ஊதியத்தில் மிச்சம் பிடித்து 
முட்டி மோதி முன்னேறத் துடிப்பவன் .

இத்தனை இடர்களிலும்
இப்பகட்டான உலகில்
படாதபாடுபட்டு பட்டுவாடா செய்பவன்.

அவன்தான் மலைக்கும் மடுவுக்கும் 
இடையே சிக்கித் தத்தளிக்கும் 
மிடில் கிளாஸ் ஆண்மகன் !!

                                            -ஜீவந் #ஜீவந் #ஆண்கள் #middleclass

#ஜீவந் #ஆண்கள் #MiddleClass