Nojoto: Largest Storytelling Platform
rohinirajamani4103
  • 6Stories
  • 5Followers
  • 112Love
    261Views

Santirathevan_Kadhali

Writer/ Memer

  • Popular
  • Latest
  • Video
081ea9d184082d6724e84599d80c1537

Santirathevan_Kadhali

New Year 2024-25 இதுவரை கடந்து போன நாட்கள்
இதுவரை எதிர்கொண்ட வலிகள்
இதுவரை பெற்ற நினைவுகள்
இன்றைய தினத்தில் மீண்டும் நினைவில்..!

புது பொழிவுடன் புதிய எதிர்ப்பார்புகளுடன்
புதிய சிந்தனையுடன் புதிய இலட்சியத்துடன்
புதிய நோக்கத்துடன் புதிய 
நண்பர்களுடன்
புதிய ஆண்டினை புனிதமாய் தொடங்குகிறேன்..!

வாழ்க்கை வெற்றிகரமாய் தொடங்கி
வாழ்க்கை நல்லப் பாடங்களைப் புகட்டி
வாழ்க்கை அறத்தைப் பின்பற்றி
வாழ்க்கையில் பல சாகங்களைப் புரிவோம்
இப்புதிய வருடத்தில்..!!

©Santirathevan_Kadhali #NewYear2024-25
081ea9d184082d6724e84599d80c1537

Santirathevan_Kadhali

White  பல காதல் கதைகளைச் சேர்த்து வைத்தேன்
பல காதல் முறிவுகளுக்கும் நானே சாட்சி ஆனேன்
கூர்மையாக நான் இருக்கும் நேரத்தில்
எழுத்துலகையே ஒரு நொடியில் ஆட்டிப் படைப்பேன்

காகிதத்திற்கு ஆறுதல் சொல்லும் நண்பனானேன்
பலரின் புத்தகப்பையில் சுற்றுலா சென்றேன்
கைத்தொலைப்பேசிகள் இல்லா அந்த பொன்னானக் காலம்
பலரின் எழுத்துத்திறனை வெளிக் கொணர உறுதுணையாய் இருந்தேன்

தேய்பிறையைச் சந்திக்கும் நிலாவைப் போல
இறுதியில் என் வாழ்வும் தேய்ந்தே முடியும்
நிலவிற்கோ விடிவு காலம் உண்டு/
நானோ பலர் வளர்வதற்கு என் உடலை வருத்தி
எழுத்துலகிற்கே அர்பணித்து உலகிலிருந்து விடைப்பெற்றுச் செல்கிறேன்

©Santirathevan_Kadhali #love_shayari #life_lesson #SAD #motivatation
081ea9d184082d6724e84599d80c1537

Santirathevan_Kadhali

Unsplash The Art of Letting Go  

To hold a moment, fleeting yet dear,  
Is to tether the heart to a shadow unclear.  
A bird in your hands will never take flight,  
Its song silenced under the weight of tight might.  

The art of letting go is a gentle release,  
A whisper of love wrapped in quiet peace.  
Like autumn leaves drifting from trees,  
Embracing the wind, they dance with ease.  

It’s in the tide’s ebb, the moon's soft descent,  
A cycle of endings, perfectly meant.  
Grief may linger like a shadowed song,  
Yet time teaches where we belong.  

In the stillness, new seeds take their place,  
Roots intertwine in life’s endless grace.  
To let go is not to forget, but to trust,  
That life renews even from dust.  

So open your hands and free the weight,  
Let love and loss meet their fate.  
For only in the letting go,  
Can we make room for hearts to grow.

©Santirathevan_Kadhali #library
081ea9d184082d6724e84599d80c1537

Santirathevan_Kadhali

Unsplash சோர்வடையும் போதெல்லாம்
பல நற்சிந்தனைகளை வழங்கி
எழுத்துலகிற்குள் என்னை மூழ்கச் செய்து
நான் பயணிக்கா காலங்களுக்கு
எழுத்தின் மூலம் என்னை அழைத்து
சென்று
எனக்குள் நல்லெண்ணங்களை உருவாக்கி
என்னை அதற்கு அடிமையாக்கி
என்னை ஆளும் புத்தகமும்
என் இரகசிய காதலி தானே...!

©Santirathevan_Kadhali #Book
081ea9d184082d6724e84599d80c1537

Santirathevan_Kadhali

White சுட்டெரிக்கும் சூரியனின்
கடும் வெயில் தாங்காமல்
நீல நிற ஆகாயம்
உன்னை பூமிக்கு வரவேற்ற தினமோ
மேகங்களுக்குள் காதல் உண்டாகி
கார்மேகமாய் மாறியதோ
சில்லென்ற தென்றலுடன்
அச்சுறுத்தும் இடியுடன்
அதிர்ச்சி அளிக்கும் மின்னலுடன்
துளியாய் பூமியில் ஜனித்தாய் .
"மழை"

©Santirathevan_Kadhali #rainy_season
081ea9d184082d6724e84599d80c1537

Santirathevan_Kadhali

உறவுகளைத் தேடவில்லை
மனிதத்தை தேடினேன்
அன்பைத் தேடவில்லை
வாய்மையைத் தேடினேன்
துன்பங்களைத் தேடவில்லை
தனித்து ஒதுங்கினேன்
ஒதுங்கிய போதும் 
நிம்மதியைப் பெறவில்லை
பொறாமை தாண்டவமாடியதால்..!

©Santirathevan_Kadhali
  #snowmountain

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile