Find the Best கவிதை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutகவிதை, கவிதை_பலகை, இரவுக்கவிதை, கவிதை_வரி, போன்சாய்கவிதை,
Sanjai
White The only way to do great work is to love what you do ©Sanjai #Thinking #LifeIsBeautiful Entrance examination Extraterrestrial life
#Thinking #LifeIsBeautiful Entrance examination Extraterrestrial life
read moreஇளையவேணிகிருஷ்ணா
அந்த எத்தனையோ மாபெரும் சாதனையாளரின் உடலும் புகழ் மனிதனின் உடலும் தோற்றுக் கொண்டு தான் இருக்கிறது அந்த மயானத்தில் எரியும் தணலில்! இங்கே அந்த தணலோ எந்த மனிதனின் சாதனையையோ புகழையோ உரிமைக் கொண்டாடாமல் எந்தவித அகங்காரமும் இல்லாமல் அமைதியாக தின்று தீர்க்கிறது அந்த உடல் எனும் ரதத்தை... இங்கே மாயையின் சுவாசத்தின் வீரியத்தை யாரும் கொல்ல இயலாமல் இங்கும் அங்கும் அலைந்து திரிகிறது... நானோ இதை எல்லாம் வேடிக்கை பார்த்து பொழுதை போக்கும் சாதாரண மனுஷியாகின்றேன்! #இளையவேணிகிருஷ்ணா. நாள்23/02/25. அந்தி மாலைப் பொழுதில்... ©இளையவேணிகிருஷ்ணா #BoneFire
இளையவேணிகிருஷ்ணா
White வலிகள் தான் பெரும்பாலான வாழ்க்கை பயணங்களை நிர்ணயிக்கின்றது! அந்த வலிகளையும் தாண்டி மௌனமாக நகர்கிறது... இங்கே வாழ்க்கை! எதுவும் புரிந்துக் கொள்ள முடியாத சூழலில் சில... எதையும் உணர முடியாத சூழலில் பல! இங்கே எதுவாயினும் எனை தாக்காத துயரென்று இங்கே ஏதும் இல்லை! வாழ்க்கை எனை மயான அமைதிக்கு மெல்ல மெல்ல எடுத்து செல்வதை மட்டும் உணர முடிகிறது... இங்கே அந்த மாயையின் பிடியில் இருந்து நழுவி போக வழி தேடி அலையும் சிறகொடிந்த பறவை நான்... #இளையவேணிகிருஷ்ணா. நாள்:23/02/25. அந்திமாலை நேரம்... ©இளையவேணிகிருஷ்ணா #GoodMorning
MUTHU A
White சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால். எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும். உன் விடா முயற்சியால். ©MUTHU A #Thinking
இளையவேணிகிருஷ்ணா
White அந்த எண்ணற்ற பயணங்கள் தான் எனை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது... என்னோடு பயணிப்பவர்கள் எத்தனையோ கதைகளை என்னோடு கதைத்து என் பயணத்தை சுவாரஸ்யமாக்குகிறார்கள்... நான் எத்தனையோ கதைகளை கேட்டு விட்டு இறங்கும் வழியில் அவர்கள் கதைகளை அந்த சாலையிலேயே விட்டு விட்டு சலனமின்றி பயணிப்பதை பார்த்து அந்த காலம் எனை இரக்கமின்றி பயணிப்பதாக கொஞ்சம் குறைப்பட்டுக் கொண்டது! நானோ இதில் என் தவறு ஏதுமில்லை! நான் எப்போதும் நான் தான்... என் உலகமும் வேறு தான்... அதுசரி அவர்கள் கதைகளுக்கு என்னிடம் ஏதும் தீர்வு தர சொல்லி இந்த பிரபஞ்சம் என்னிடம் உத்தரவிடவில்லையே என்றேன் அதுவும் சரிதான் என்று அந்த காலமும் மெல்லிய புன்னகையுடன் விடைப்பெற்றது நானும் தான்... #இளையவேணிகிருஷ்ணா. நாள் 16/02/25/ஞாயிற்றுக்கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா #Thinking