Nojoto: Largest Storytelling Platform
umamaheswari4208
  • 257Stories
  • 508Followers
  • 7.6KLove
    26.3KViews

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

இவள் அந்தமான் பெண்மணி. கவிதை எழுதுவது பிடித்த விசயம் அன்பிற்கு அடங்குவேன் . ஆணவன் கண்டு அலட்டிக் கொள்ள மாட்டேன்.

  • Popular
  • Latest
  • Video
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White koi interest nhi hai aur continue karne ka Sorry to say Nojoto Chitting every one only bcoz of their benefits

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #GoodNight
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White Nojoto work Nahi kiya kuch b upload nhi kar sakke.Ye meri galthi tu nhi hai ab mere ko strike 1 mei laakker chod diye. its not a right way to skip any once strike chitting

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #GoodNight
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White Hiiiiii
Happy Gandhi Jayanti

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #gandhi_jayanti
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White  

இதுவரை..!!

இதுவரை நீ வஞ்சித்தது இல்லை!_ வலிகள் தராது  பாதுகாக்க எனக்கு தெரியவில்லை; என் இதயம் நீ: உனக்காகவே இயங்கும் என்று வரிசையில் வந்தவர்களின்  கணக்கீடு வைத்திட முடியாத நெருக்கடி மறதி  என் புத்திக்கு! என் கிறுக்குத்தனத்தின் கீறல்கள் தைத்து நாராய்  கிழிந்த போதிலும் இந்த நிமிஷம் வரை என்னை தண்டித்ததில்லை நீ! வந்து போனவைகளுக்கு தங்க இடமளித்தேன்; என்னை தாங்கித் துடிக்கும் உன் நிலை எப்படி மறந்தேன்?!
உன்னுடனே பயணித்தும் என்னை மட்டுமே நேசித்தேன்;நீ என்னுடனே பயணித்தும் உன்னை மட்டும்  யோசிக்க ஏன் மறந்து விட்டேன்??இனியொரு க்ஷணமும் உனை நான் வதையேன்! என் வாழ்வு குறைந்தாலும் உனை நான் மறவேன்!
இப்படிக்கு, உன்னால் மட்டுமே வாழும் ஜடமே!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #love_shayari
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White 4321 கவிதை ..!!

நான் நீ நாமாக நமக்காகவே 
தனித்தியங்கிய இதயம் தானாகவே....
இணைந்து துடித்ததே
கவிதை!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #good_night
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White இளைப்பாறல் தேடி...!!


 இளைப்பாற வந்தமர்ந்த
பறவைகளுக்கு இங்கிதம் இல்லை;
தஞ்சம் தேடி வந்து அமர்ந்த கிளைகளை மட்டுமின்றி மரங்களையே ஆக்ரமிப்பு செய்து கொண்டன; 
அனுமதி ஏதுமின்றி! பறவைகளுக்கும் மனித குணம் பரவலாக உண்டு போலும்!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #love_shayari
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White  

இளைப்பாறல் தேடி...!!

இளைப்பாறல் வேண்டி 
இளமனம் ஏங்கும் இயலாமை
 காதல் இன்னும் என்ன செய்யத் துணியும்?
மன மயங்கலில் மதியும் கொஞ்சம் 
மருகித்தான் போகும்
மதில் மேல் பூனையென மனம் 
இங்கும் அங்கும்  தாவிட முயலும்!
மனம் கெட்டுப் போனதினால் 
மதியும் குட்டிச்சுவரேறித் தான் தாவும்!
இடறி விழுந்த பின்னே
மதியை மனம் சாடும்!
காதல் பாடல் எல்லாம் சுருதியோடு 
சங்கீதம் ஆவது இசை மீட்டியவனின் 
வல்லமை யாகும்! 
ஸ்ருதி லயம் சேராத விரல் மீட்டினால் 
தந்தி அறுந்த வீணை போல் தானே ஆகும்!!
இவள்....
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #engineers_day
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White கொண்டவன் கொடியவன்  
அமைந்து போனாலும்..
சந்தர்ப்பம் அவளுக்கு சிறு சிறு சந்தோஷங்களை அதுவாகவே அமைந்து விடும்; அல்லது அமைத்துக் கொடுத்து விடும்!
ஆனால்...உலகில் அவளை கொண்டு வந்தவர்கள் கொடியவரானால்..
சந்தோஷங்களும் சங்கடத்தில் தான் போய் முடியும்!!
இவள்..
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #hindi_diwas
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White உனைத் தேடி வருகிறேன்!
என் உயிர் நாடி நீ தானே!!
மலை உச்சியில் நீயிருக்க
படியேறிட முடியாது நான் தவிக்க
437 படிகளை தாண்டி உனை வேண்டி
கரம் கூப்பி மலை இருங்கினேன் ஐய்யனே..எனதப்பனே..
இருந்த மூட்டு வலி கூட தெரியவில்லை!!
நேற்று உச்சிப் பிள்ளையார் தரிசனம்!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #sad_quotes
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White  பூக்களும் முட்களும்...!!

முட்களுக்கும் காதலுண்டு பூக்களிடம் சமிக்ஞை புரிந்த காற்று.. சில்மிஷம் செய்ததில் முட்களுரசியது  காயம் பட்ட பூக்களுக்கு என்றுமே முட்கள் மீது வெறுப்பு தான்! 
ஆசைப்பட்டவனின்  கைகளில் உயிரறுத்து கொடுக்கும் பூ விற்கு உயிர் பிரித்தவன் மீது தான் ஒப்பற்ற காதல்! ஆசைக்கு அலங்காரம் செய்கிறது! கருவறுத்தவனை கண்டிக்காத பூ தற்காதவனை தண்டித்து மடிகிறது!
முட்களின் காதல் என்றுமே ஒருதலைக் காதல் தான்!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #love_shayari
loader
Home
Explore
Events
Notification
Profile