Nojoto: Largest Storytelling Platform
umamaheswari4208
  • 257Stories
  • 508Followers
  • 7.6KLove
    26.3KViews

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

இவள் அந்தமான் பெண்மணி. கவிதை எழுதுவது பிடித்த விசயம் அன்பிற்கு அடங்குவேன் . ஆணவன் கண்டு அலட்டிக் கொள்ள மாட்டேன்.

  • Popular
  • Latest
  • Video
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White இளைப்பாறல் தேடி...!!


 இளைப்பாற வந்தமர்ந்த
பறவைகளுக்கு இங்கிதம் இல்லை;
தஞ்சம் தேடி வந்து அமர்ந்த கிளைகளை மட்டுமின்றி மரங்களையே ஆக்ரமிப்பு செய்து கொண்டன; 
அனுமதி ஏதுமின்றி! பறவைகளுக்கும் மனித குணம் பரவலாக உண்டு போலும்!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #love_shayari
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White  

இளைப்பாறல் தேடி...!!

இளைப்பாறல் வேண்டி 
இளமனம் ஏங்கும் இயலாமை
 காதல் இன்னும் என்ன செய்யத் துணியும்?
மன மயங்கலில் மதியும் கொஞ்சம் 
மருகித்தான் போகும்
மதில் மேல் பூனையென மனம் 
இங்கும் அங்கும்  தாவிட முயலும்!
மனம் கெட்டுப் போனதினால் 
மதியும் குட்டிச்சுவரேறித் தான் தாவும்!
இடறி விழுந்த பின்னே
மதியை மனம் சாடும்!
காதல் பாடல் எல்லாம் சுருதியோடு 
சங்கீதம் ஆவது இசை மீட்டியவனின் 
வல்லமை யாகும்! 
ஸ்ருதி லயம் சேராத விரல் மீட்டினால் 
தந்தி அறுந்த வீணை போல் தானே ஆகும்!!
இவள்....
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #engineers_day
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White கொண்டவன் கொடியவன்  
அமைந்து போனாலும்..
சந்தர்ப்பம் அவளுக்கு சிறு சிறு சந்தோஷங்களை அதுவாகவே அமைந்து விடும்; அல்லது அமைத்துக் கொடுத்து விடும்!
ஆனால்...உலகில் அவளை கொண்டு வந்தவர்கள் கொடியவரானால்..
சந்தோஷங்களும் சங்கடத்தில் தான் போய் முடியும்!!
இவள்..
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #hindi_diwas
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White உனைத் தேடி வருகிறேன்!
என் உயிர் நாடி நீ தானே!!
மலை உச்சியில் நீயிருக்க
படியேறிட முடியாது நான் தவிக்க
437 படிகளை தாண்டி உனை வேண்டி
கரம் கூப்பி மலை இருங்கினேன் ஐய்யனே..எனதப்பனே..
இருந்த மூட்டு வலி கூட தெரியவில்லை!!
நேற்று உச்சிப் பிள்ளையார் தரிசனம்!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #sad_quotes
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White  பூக்களும் முட்களும்...!!

முட்களுக்கும் காதலுண்டு பூக்களிடம் சமிக்ஞை புரிந்த காற்று.. சில்மிஷம் செய்ததில் முட்களுரசியது  காயம் பட்ட பூக்களுக்கு என்றுமே முட்கள் மீது வெறுப்பு தான்! 
ஆசைப்பட்டவனின்  கைகளில் உயிரறுத்து கொடுக்கும் பூ விற்கு உயிர் பிரித்தவன் மீது தான் ஒப்பற்ற காதல்! ஆசைக்கு அலங்காரம் செய்கிறது! கருவறுத்தவனை கண்டிக்காத பூ தற்காதவனை தண்டித்து மடிகிறது!
முட்களின் காதல் என்றுமே ஒருதலைக் காதல் தான்!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #love_shayari
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White  ஒரு பெறும் புயல் அடித்து சென்ற பூஞ்சோலையாய் தான் நானும் அங்கும் இங்குமாய் சிதறிய சருகளாய் உதிர்ந்தும்  உதிராது வாடிய பூக்களைப் போல் மாறிப்போனது என் வாழ்க்கை பயணமும்!! 

இவள்.. 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #GoodMorning
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White  என்னை நானே...!!

தேற்றிக் கொள்வதை விட வேறென்ன மகத்துவம் இருக்கப் போகிறது என் தோல்விகளை மேன்மை செய்ய?!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #Sad_Status
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White  என்னை நானே..தேநீர்!!
ஒரு குவளைக்குள் கொதி நிலையில் நீ!
ஒரு கொள்கைக்குள் 
திட நிலையில் நான்!
வேறு பாடு என்னவென்றால்
தேவை படும் போது உன்னை தேடி பருகுவர்!
தேவைப் பட்டால் மட்டுமே என்னை நாடி வருவர்!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #Sad_Status
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White  கொட்டுங்கள் வாங்கி கற்றவை யாவும் ..
துட்டுகள் நீட்டித் தரலாம் 
அது தரலாமலும் திண்டாடச் செய்யலாம்!
ஆனால்...
பட்டு தேர்ந்த பாடங்கள்
வாழ்வை கற்றுத் தரலாம்
கை கட்டி தலை குனிந்து
வாழாது படி ஏற்றி விடலாம்!!
அதற்கும் சுழி போட்டு தரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #Ganesh_chaturthi
772a3c8e36a813266b09fc0cd872e36b

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

White ஒளிந்து கொண்டு..!!

ஒளிந்து கொண்டு 
விளையாடும் வாழ்க்கையை தெளிவு கொண்டு தேர்ச்சி காண்பதே வெற்றி!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #Shiva
loader
Home
Explore
Events
Notification
Profile