Nojoto: Largest Storytelling Platform
logeshrajan5382
  • 5Stories
  • 11Followers
  • 47Love
    121Views

Logesh Rajan

  • Popular
  • Latest
  • Video
fd437200893293e33ed2092b6f826826

Logesh Rajan

இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்

©Logesh Rajan #Hanuman #moyivationalquotes
fd437200893293e33ed2092b6f826826

Logesh Rajan

எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது

©Logesh Rajan #ramadan #treanding #moyivationalquotes
fd437200893293e33ed2092b6f826826

Logesh Rajan

#bike #bikelover #ns200 #RS200 #bikelover
fd437200893293e33ed2092b6f826826

Logesh Rajan

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு...

©Logesh Rajan #klrahul #motavitonal #hardwork #confidence
fd437200893293e33ed2092b6f826826

Logesh Rajan

அவள் கண்களால் அதை  நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை ; அதை பார்த்த பின் நெஞ்சு பட பட அடிக்க ஆரம்பித்து , மூச்சு  வாங்கியது, ஆற்றில் வெள்ளம் பாய்ந்து ஓடுவது போல உடம்பிலுள்ள எல்லா நரம்புகளிலும் இரத்தம் ஓடியது , 
இரவு 10:00 மணியளவில் அந்த  தூரத்து நடைபாதையில் ஒரு சிறு குழந்தை  படுத்து இருந்தது , தூத்துக்குடி பேருக்குத்தான் மாநகரம் ஆனால் 10 மணிக்கு ஆள் நடமாட்டமே இல்லாத இந்த தெரு பகுதி . மேகங்கள் சூழ்ந்திருந்த வானத்தில் ஆங்காங்கு சில நட்சத்திரங்கள் சுடர்விட்டு எரிந்தது போல இந்த தெருவில் மின் விளக்குகள் எரிந்தன,

அவள் சில நிமிடங்கள்  காரில் இருந்து பார்த்தாள்.., அந்த காரை நிறுத்திவிட்டு , குழந்தையை இருந்த இடத்திற்கு நோக்கி நடைபாதையில் அவசரமாக நடக்க ஆரம்பித்தாள்.


அவள் மனதில் எல்லா வகையான எண்ண ஓட்டம் தாமிரபரணி ஆறு போல ஓடியது.

ஒருவேளை தனக்கு வைத்த பொறியாக இருந்தால் இருக்குமோ ? 
அப்படி இருந்தால் தனக்கு ஏற்படக்கூடிய அனைத்து வகையான பின் விளைவுகளை நினைத்து ஆறு கடலில் சேருவது போல மூளையிலிருந்து  இதயத்திற்கு எண்ண அலைகள் சேர்ந்தது. பூக்கள் வண்டுகளை சுற்றி வலம் வருவது மாதிரி அவள் கண்கள் எல்லா திசைகளிலும் பார்த்துக்கொண்டே அருகில் போனால் ,  இடி தாக்கும் உணர்ச்சியை ஆத்திரம் ,பயம் மற்றும் கவலை உணர்ந்தாள் ,.

ஐயோ கடவுளே..

என்ன விசித்திரம் ?

இது யார்?

மனிதநேயம் இறந்துவிட்டதா…!

"இது போன்ற  செயல்கள் செய்தது  யார்?

இப்படி ஒரு குழந்தையை நடுரோட்டில்
விட்டுவிடுகிறார்கள்?"

அந்த  குழந்தை உயிரோடு தான் இருக்கிறது; எந்த ஒரு காயமில்லை என்று அவள் வேண்டிக் கொண்டே அருகில் செல்ல செல்ல  மலர்கின்ற தாமரையைப் போல மனதில் ஓர் உணர்வு எழுந்தது . சிந்திக்கக் கூட  
விரும்பாத ஒன்று இன்னும் ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில்  நடக்கும் தீமைகளை எண்ணி மனம் குமுறியது . மோசமான சம்பவங்கள் எதுவும் நடக்காது என்று தனக்குள் சொல்லிக்கொண்டே பாதையை அடைந்தாள். குழந்தை நன்றாக இருந்தது.அவளுக்கு கண்களில் நீர்ப்படலங்கள் கண் பார்வையை மூடி மறைக்க முயன்றது .

இனி எந்த அசம்பாவிதம் நடக்காது எண்ணிக் கொண்டால், அவள் பார்க்க விரும்பாத கண்களில் பார்த்தாள். மனிதநேயத்தின் சார்பாக அவள் வெட்கப்பட்டாள். குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்ல சிறிது தயங்கினாள். இந்த சமூகம் என்னும் கூண்டுக்குள் இருப்பதை நினைத்து வருந்தினாள்.

©Logesh Rajan #alone #horror #thiller #


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile