Nojoto: Largest Storytelling Platform
renukavaithyanat3504
  • 140Stories
  • 0Followers
  • 0Love
    0Views

Renuka Vaithyanathan

  • Popular
  • Latest
  • Video
b136a5ab4d76019764810c68c74ece70

Renuka Vaithyanathan

நிலவென்று 
நங்கையை நினைக்க நீங்கள் யார்.?

மயிலென்று 
மையலை மதிப்பிட நீங்கள் யார்.?

அழகென்று 
அவளை அளவிட நீங்கள் யார்.?

பூ என்றும் பூமி என்றும் 
பெண்மைக்கு பெயரிட நீங்கள் யார்.?

அவளின்றி அகிலத்தில் 
அணுகூட அசைவதில்லை என்ற 
அடைமொழிகளும் தேவை இல்லை.!

இறுதியில் அவள் பெண்தானே என்ற 
அவப்பெயர்களும் தேவை இல்லை!!

அவள் அவளாகவே இருந்து விட்டு போகட்டும்.!!

இப்படிக்கு இவளாக!! #Renu_Writes
#பெண்மை 
#அவளை_அளவிட_வேண்டாம்

#Renu_Writes #பெண்மை #அவளை_அளவிட_வேண்டாம்

b136a5ab4d76019764810c68c74ece70

Renuka Vaithyanathan

காலாற நடந்தாலும்
கப்பல் ஏறி கடந்தாலும்
கடந்து வந்த பாதையினை
கண்டும், காணாமல்
நிமிர்ந்து நின்றதும்
கேலி செய்ய கூட்டம் தேடிவரும்!
காணாது போ!!
கலங்காமல் களத்தில் இரு!!!

முட்பாதையில்
நீ முன்னேறி செல்கையில்
முடங்க வைக்கும் மொழிகள் உன்னை
முந்திச் செல்லும்!
முள் என அதை 
மிதித்து போ!!
முயற்சியுடன் 
களத்தில் இரு.!!!

வீணாக போனாய் என
வீணர்கள் வாய்மொழி
வீரியத்துடன்
வதைக்கும்!
விட்டுச் செல்!!
விதையாய் விழுந்தோம் என
விருட்சமாய் வளர்வோம் என
விலகாமல் களத்தில் இரு!!!

விடியலில் உன் வெற்றி
விண்ணைத் தொடும்!!!! #RenuWrites
#களத்தில்_இரு

#RenuWrites #களத்தில்_இரு

b136a5ab4d76019764810c68c74ece70

Renuka Vaithyanathan

விட்டு விட்டு 
முத்தமிடும் 
மழைத் தூரலில்
கொஞ்சம் 
கிறங்கித்தான் 
போகிறாள்
மண்மகள்!! #RenuWrites
#மழைத்தூரல்

#RenuWrites #மழைத்தூரல்

b136a5ab4d76019764810c68c74ece70

Renuka Vaithyanathan

உங்கள்
நிஜங்களை
என்னிடம் தேடாதீர்கள்.!
நான் ஒரு கற்பனை!!

உங்கள் வண்ணங்களை
என் வானவில்லில்
உமிழாதீர்கள்.!
நான் வெறும் வர்ணனை!! #RenuWrites
#மாயை
#சுயத்தினை_உன்_சுயத்தில்_கொள்

#RenuWrites #மாயை #சுயத்தினை_உன்_சுயத்தில்_கொள்

b136a5ab4d76019764810c68c74ece70

Renuka Vaithyanathan

கசக்கி  எறிந்தபின் 
கவிதை மீண்டும் 
கையெழுத்து பெறுமோ!?
காதலும் மீண்டு 
கரைகண்டு சேருமோ.!? #கிறுக்கிப்போட்ட_காதல்கவிகள்
#இலக்கிய_வானம்
#RenuWrites
#yqvanam
இலக்கிய வானம்✍      #YourQuoteAndMine
Collaborating with இலக்கிய வானம்✍

#கிறுக்கிப்போட்ட_காதல்கவிகள் #இலக்கிய_வானம் #RenuWrites #yqvanam இலக்கிய வானம்✍ #YourQuoteAndMine Collaborating with இலக்கிய வானம்✍

b136a5ab4d76019764810c68c74ece70

Renuka Vaithyanathan

உன் உதடுகள்
உதிர்க்கும்
ஒரு சொல்லில்
என் உதிரம்
உணர்விழந்து
ஓட மறுக்கும்!!

உலகம் நீயென
உருவகமான பின்
ஓடும் நேரமும்
என் உயிரைக் குடிக்கும்!

கண்கள் கலந்த பின்னர்
கால்கள் செல்லும் தூரம் வரை
காதலும் காலத்துடன்
சேர்ந்தே பயணிக்கும்!! #RenuWrites
#கல்யாணம்_முதல்_காதல்_வரை
#காலமும்_காதலும்

#RenuWrites #கல்யாணம்_முதல்_காதல்_வரை #காலமும்_காதலும்

b136a5ab4d76019764810c68c74ece70

Renuka Vaithyanathan

விண் இடும் தூறல்அதில் 
கை கோர்த்து நடக்க,

விழி இடும் தூறல்தனை 
துடைக்கும் கரங்களை

எதிர்பார்த்து நனைகிறது
பேதை மனம்..!! #RenuWrites
#தினம்_நனையும்_மனம்

#RenuWrites #தினம்_நனையும்_மனம்

b136a5ab4d76019764810c68c74ece70

Renuka Vaithyanathan

மனக்கண்ணின் ஓரம்
மழைக்காலம் பெறுகின்றேன்.!
________________________________

கலைந்த என் மௌனமோ
கதறியபடி காதலைக் 
கரைக்கக் கண்டேனே!!!


 #எசப்பாட்டு 

#RenuWrites
#மௌனத்தின்மீது #collab #yqkanmani #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#எசப்பாட்டு #RenuWrites #மௌனத்தின்மீது #Collab #yqkanmani #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

b136a5ab4d76019764810c68c74ece70

Renuka Vaithyanathan

தொலைந்து போ மனமே

(👇) என் தவிப்புகளைத் 
தவிர்த்து விட்டுச்செல்கிறாய்!
என் இதயத் துடிப்பை 
ஏற்றி விட்டுச்செல்கிறாய்!

மறக்க விரும்பும் மனத்திற்கு நான் 
மருந்திட நினைக்கையில்
மறுபடியும் ஏன் வந்து

என் தவிப்புகளைத் தவிர்த்து விட்டுச்செல்கிறாய்! என் இதயத் துடிப்பை ஏற்றி விட்டுச்செல்கிறாய்! மறக்க விரும்பும் மனத்திற்கு நான் மருந்திட நினைக்கையில் மறுபடியும் ஏன் வந்து #RenuWrites #தொலைந்து_போ_மனமே

b136a5ab4d76019764810c68c74ece70

Renuka Vaithyanathan

காத்திருக்கும்
பொழுதுகள் எல்லாம்
கானல் நீரே!

காதலிக்கும்
பொழுதுகள் எல்லாம்
களிப்புடன்
கரையுமெனில்!! #RenuWrites
#காதலும்_காத்திருப்பும்

#RenuWrites #காதலும்_காத்திருப்பும்

loader
Home
Explore
Events
Notification
Profile