Nojoto: Largest Storytelling Platform
meeyali6389
  • 20Stories
  • 29Followers
  • 166Love
    10Views

meeyali

  • Popular
  • Latest
  • Video
e2e4298f54bae8e3a9a2a7d63731f87c

meeyali

#குட்டிக்கதை

#குட்டிக்கதை #உந்துதல்

37 Views

e2e4298f54bae8e3a9a2a7d63731f87c

meeyali

குட்டிக்கதை 

அடேய் திவ்யம்  என்ன டா ஆச்சு 
ஊருக்கு போகல என்று கோபத்தோடு கேள்வி கேட்ட தாய்  உமாவிடம்  திவ்யம் ஒன்றும் சொல்லவில்லை. மௌனத்தையே பதிலாக கொடுத்தான். 

டேய்  பாட்டி வீட்டுக்கு போகல பார்த்துட்டு வாடா
 பாட்டி வேற நீ வரல வரல னு கிடக்கறாங்க.....

அம்மா என்று கூவி ஓவென்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டான். 

டேய் ஏன்டா அழுகுற ......

அம்மா அம்மா என்று தேம்பி தேம்பி அழுதவனிடம்

என்னடா சொல்லு.. டேய் அழுகாதடா 
 சொல்லு .டா 

அம்மா பாட்டியோட சுறுக்கு பை இருக்கு ல அதுல இருந்து வெத்தலை எடுத்தேன் ஒரு நாள் அது பாட்டிக்கு தெரியாது ......யாருடா வெத்தலை எடுத்தது டேய் உமா மகனே நீ தான் எடுத்தியா னு கண்டுபிடிச்சுட்டாங்க....இப்போ போனா அதை சொல்லிக்காட்டி திட்டுவாங்க ....

ஏன்டா வெத்தலை எடுத்த என்று உமா சிரி சிரி என சிரித்தாள்...

அது வந்து பாட்டி வெத்தலை போட்டா நாக்கு செவக்குதுல அதான்...நமக்கும் நாக்கு செவக்கணும் னு ..

என்ன நாக்கு சிவந்துச்சா 

ம்ஹூம் கராமா இருந்துச்சு .....

அடேய் நான் பெத்த மகனே வெத்தலையோட சுண்ணாம்பு பாக்கும்  போட்டா தான் டா நாக்கு சிவக்கும் ...அதும் இல்லாம நீ படிக்கிற பையன் வெத்தலை போட்டா படிப்பு வாராது ....வேணும் னா வெத்தலை காம்பு கிள்ளி போட்டுக்கோ .......


அம்மா வேண்டவே வேண்டாம் வெத்தலை காரமா இருக்கு ....இனி வெத்தலை சாப்பிட மாட்டேன் .....ஜஸ்கிரிம் தான் சாப்பிடுவேன்....

#குட்டிக்கதை#அரும்பிசை

©meeyali #குட்டிக்கதை

#குட்டிக்கதை #உந்துதல் #அரும்பிசை

9 Love

e2e4298f54bae8e3a9a2a7d63731f87c

meeyali

தீட்டிய காகிதங்கள் எல்லாம் 
மலையென குவிய
உயிரே உறவென 
நீயே என் வாழ்வென 
ஓராயிரம் முறை 
சொல்லி சொல்லி 
வரைகிறேன் 
எந்த ஒளியும் ஒலியும் இன்றி

©meeyali #stay_home_stay_safe
e2e4298f54bae8e3a9a2a7d63731f87c

meeyali

அந்திவான் நிலவே 
உன்னை அளவெடுத்து
வட்டமிட்டு வைத்த இறையே
கோபமிட்டு சிவக்க வைத்தாரோ 
இல்லை இங்கே அரங்கேறும் 
 நிலை கண்டு வருந்தி சிவந்தாயோ
எங்கு காணினும் உன் கோரமிகுந்த சிவந்த முகமே 
என்ன செய்கவோ ??

©meeyali #SuperBloodMoon
e2e4298f54bae8e3a9a2a7d63731f87c

meeyali

எங்கெங்கோ தேடிய உறவுகள் இங்கே உள்ளதென பெருமூச்சு விட்டேன் 
உயிரில் கறைந்த நினைவோ 
நெஞ்சில் 
வீழ்ந்து உருக
எல்லாம் மாயை
 என உணர்ந்தேன் 
வாராத எதிர்பார்ப்புகளோடு

©meeyali #tamil #tamilkavithai #tamilpoetry#ninaivu 
#Flower
e2e4298f54bae8e3a9a2a7d63731f87c

meeyali

நான் யார் என்பதை மறந்தேன் 
அந்தி நிலவே உன்னைக் காணாது 
அல்லும் பகலும் உறங்காது 
விழித்து விழித்து 
நோயுற்று இறக்கின்றேன் 
நிலவே வாராயோ 
வந்து உன் முகம் காண வரம் தாராயோ !!!

©meeyali #womensday2021
e2e4298f54bae8e3a9a2a7d63731f87c

meeyali

குட்டிக்கதை 

ஒருவன் நீர்  நிறை ததும்பும் குடத்தை எடுத்துக்கொண்டு 
ஓடோடி வர 
ஏம்பா என்ன ஆச்சு ?" தண்ணீர் தான் இருக்குதுல அப்புறம் இப்படி குடம் எடுத்துட்டு ஓடி வர" என்று ஒரு பெரியவர் கேட்க 
அவனோ ஐயா என்ன தான் தண்ணீர் நிறம்பி வழிந்து இருந்தாலும் அது நல்ல தண்ணீர் இல்ல ஐயா வீண் ஆகக்கூடாது னு  இத எங்கயாச்சும் மரத்துக்கு ஊத்திட்டு  நல்ல தண்ணீர் பிடிச்சுட்டு போகலாம் னு வந்தேன் என்று சொல்ல


எந்தப்பொருளும் வீண் ஆகாது நாம் பயன் படுத்தும் விதத்தில் உண்டு என்று புரிந்துகொண்டாராம் அந்தப்பெரியவர்..........

©meeyali

12 Love

e2e4298f54bae8e3a9a2a7d63731f87c

meeyali

தேடிய பொழுதுகளில் கிடைக்காத ஒரு புன்னகை ஏனோ பல வண்ணங்களை  பார்த்தவுடன் கிடைக்கிறது

While searching my happiness in many places ;
I received a peace and happiness
when mg eyes met with colours

©meeyali #colours

8 Love

e2e4298f54bae8e3a9a2a7d63731f87c

meeyali

தீயில் சுட்டு 
விழாத வடு
ஏனோ நீ சொன்ன 
அச்சொல் 
ஈட்டியாய் ஏறியது 
  என் மனதில்

©meeyali #flowers

8 Love

e2e4298f54bae8e3a9a2a7d63731f87c

meeyali

உயிராய் நீ கொடுத்த 
உன் உள்ளம் 
என் இல்லமென இருக்கவே 
நான் நிறையாது போகிறேன் 
இந்த ஆயுத உலகில்

©meeyali #zindagikerang
loader
Home
Explore
Events
Notification
Profile