Nojoto: Largest Storytelling Platform
suryakalaivani7810
  • 221Stories
  • 5Followers
  • 20Love
    149Views

Surya Kalaivani

Story ,Quotes Writer subscribe surya Kalaivani YouTube channel

https://youtube.com/channel/UCDPOy4zTTVz6Pbr14i8TC2Q

  • Popular
  • Latest
  • Video
e4e68ac7541a78602542f6e90a91ab51

Surya Kalaivani

ஓசையாக நானிருப்பேன்!
சிலையாக நீ இருந்தால் 
உன்னை செதுக்கும் உளியாக நான் 
இருப்பேன்!
கனவாக நீ இருந்தால் 
கற்பனையாக நான் இருப்பேன்!
மொழியாக நீ இருந்தால்
எழுத்து வடிவமாக நான் இருப்பேன்!
வாழ்க்கையாக நீ இருந்தால்
விதியாக நான் இருப்பேன்!
தமிழாக நீ இருந்தால்
கவியாக நான் இருப்பேன்!  #கடலாகநீஇருந்தால் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#கடலாகநீஇருந்தால் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

e4e68ac7541a78602542f6e90a91ab51

Surya Kalaivani

பூமி சுழல்வது நின்று போகாது ஆனால்
மனிதனின் இயக்கம் நின்று போகும்!
எங்கோ வெகுதொலைவில் இருக்கும்
பாசபந்தத்தின் உறவு 
துண்டித்துப் போகும்!
கடிதத்தை மறக்கவைத்து தபால் 
பெட்டியை அலங்கார பொருளாக்கி
வீதியில் நிற்கவைத்து, 
நொடிப் பொழுதில் நீ அனுப்புகின்ற
குறுஞ்செய்தி இல்லாமல் போனால்
இந்த மனிதகுலம் என்னவாகும்....?
மனிதர்களை ஆட்டிப்படைக்கும் 
கைப்பேசியே நீ இல்லாமல் போனால்
அவர்களின் இயல்பு வாழ்க்கை 
கேள்விக்குறியாகும்!
 #நீஇல்லாமல்போனால் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்
#yqkanmani #tamil #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
#suryakalaivani  #letters #philosophy #quotestitchers

#நீஇல்லாமல்போனால் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #suryaKalaivani #letters #philosophy #quotestitchers

e4e68ac7541a78602542f6e90a91ab51

Surya Kalaivani

விடியலை எதிர்நோக்கி காத்திருக்கும்
மானிடர்களிடம் கண்ணாமூச்சி 
ஆடுகிறாய்!
மேகக்கூட்டங்கள் உன்னை மறைத்ததோ! 
நீ மேகக்கூட்டத்தினுள் மறைந்து 
கொண்டாயோ தெரியவில்லை?
நீ மறந்து கொண்டால் இந்த உலகம் 
இருளில் மூழ்கிவிடும் அல்லவா!
உந்தன் ஒளியால் இந்த உலகம் 
வாழ்கிறது!
மேகக்கூட்டத்தில் இருந்து வெளியில் 
வந்து உன் ஒளிக்கதிரை இந்த பூமியில் 
பரவச்செய் கதிரவா! #கண்ணாமூச்சிஆடுகிறாய் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#கண்ணாமூச்சிஆடுகிறாய் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

e4e68ac7541a78602542f6e90a91ab51

Surya Kalaivani

ஒவ்வொரு காதலும் மோதலில் 

தொடங்கி காதலில் முடிகிறது!

காதலித்தப் பிறகு ஒவ்வொரு நாளும்

மோதலிலையே தொடங்கி அந்த 

மோதலே காதல் வாழ்க்கையாக மாறிப் 

போகிறது!

e4e68ac7541a78602542f6e90a91ab51

Surya Kalaivani

காற்றோடு காற்றாக

கானகத்தில் மலைகளின் வஞ்சியில்

தொலைந்து போக விரும்புகிறேன்! #தொலைந்துபோகவிருப்பம் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#தொலைந்துபோகவிருப்பம் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

e4e68ac7541a78602542f6e90a91ab51

Surya Kalaivani

கனவுகள் மெய்ப்பட

வெற்றிப் பாதை புலப்பட

பயணங்கள் இனிதாக

துன்பங்கள் அனைத்தும் பறந்திட

கைத்தட்டல் ஓசையை இந்த உலகம் 

கேட்கும் தருணம் அந்த நொடி நான்

என் கனவை நனவாக்கி வெற்றியை

கையில் ஏந்தி சிறுப் புன்னகையோடு

நின்றிடுவேன் வெற்றி மேடையில்....

e4e68ac7541a78602542f6e90a91ab51

Surya Kalaivani

அழகை மிகைப்படுத்திக் காட்டும்
அணிகலன்களை விட 
பாரங்களை சுமந்து
கல்லும்,முள்ளும் தன்னை 
காயப்படுத்தினாலும் 
உழைத்து தேய்ந்துப் 
போகும் "காலணிகளே"சிறந்தது!

e4e68ac7541a78602542f6e90a91ab51

Surya Kalaivani

காற்றில் மிதக்கும் 
உன் வாசனையை 
உணர்ந்து நீ சென்றப் பாதையில்
உன்னைத் தேடிப் பயணிக்கிறேன் 
காதலியே.. #நீவந்துசென்றதடம் - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்

#எசப்பாட்டு #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#நீவந்துசென்றதடம் - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள் #எசப்பாட்டு #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

e4e68ac7541a78602542f6e90a91ab51

Surya Kalaivani

வானம் உன்னால் அழகானது!
பூமி உன்னால் புது ஒளி கொண்டது!
நீரோடைகள் வெள்ளிப் போல 
மின்னியது!
அல்லி மலர் உன்னை கண்டுப் 
புன்னகைத்தது!
உன் மீது காதல் கொண்ட காதல் பித்தன்
உனக்காக பூமியில் காத்திருக்கிறேன்!
உன்னை ரசிக்கவே இரவெல்லாம் கண் 
விழித்திருப்பேன்!
என் காதலைப் புரிந்து கொண்டதால் 
தான் என்னவோ என்னைப் பார்க்க இந்த 
ஏழையின் ஓட்டு வீட்டு மாளிகைக்கு 
வந்தாயோ!
நான் நடந்து சென்றால் என்னுடன் 
வருவாய்!
நான் நின்றுவிட்டால் என்னுடன் 
இருப்பாய்!
நிலவே உன்னை ரசிக்க எனக்கு இரண்டு
கண்கள் போதவில்லை!
அதே போல உன்னை வர்ணிக்க 
என்னிடம் வார்த்தையும் இல்லை...

e4e68ac7541a78602542f6e90a91ab51

Surya Kalaivani

எங்கோ தொலைதூரத்தில் நீயும்

உன்னை தொலைத்துவிட்டு நானும்

பிரிந்து வாழும் தருணத்தில் உன்

கடிதம் ஒன்றே என் கவலைகளைப் 

போக்கும் மருந்து.,

உனக்காக நான் எழுதும் ஒவ்வொரு 

கடிதமும்  கண்ணீரால் 

எழுதப்பட்டது....

உன்னுடைய ஒவ்வொரு 

கடிதத்திற்காகவும் ஆவலோடு 

காத்திருப்பேன்...

இன்றும் உனக்காக கடிதம் எழுதுகிறேன்!

ஆனால் படிப்பதற்கோ எனக்கு பதில் 

கடிதம் எழுதுவதற்கோ நீ இல்லை!

காதல் என்ற வார்த்தைக்கு பிரிவு 

என்பது தான் அர்த்தமா?

நீ எழுதிய இறுதி கடிதத்தோடு சொல்ல 

முடியாத துயரங்களோடு வாழ்கிறேன்!

loader
Home
Explore
Events
Notification
Profile