Nojoto: Largest Storytelling Platform

Best ponmagalvanthal Shayari, Status, Quotes, Stories

Find the Best ponmagalvanthal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about shayari love photos free download jio pon, ponmagal vandhal in hindi, hindi pon 390, pon video song 320, kadhalin pon veethiyil song,

  • 1 Followers
  • 1 Stories

Nila

எத்தனையோ படங்கள்... புரட்சிகள், மாற்றங்கள், புது தொழில் நுட்பங்கள் என்று மிக உயரிய பரிணாம வளர்ச்சியை பெற்று உள்ளது இன்றைய படங்கள் ! பொதுவாக எந்த படத்தை பார்த்தாலும், சுமார் ஒரு இரண்டு மணி நேரமாவது, அந்த படத்தை பற்றிய சிந்தனைகள் மனதில் அசை போட்டுக் கொண்டிருக்கும். காதல் படங்களாக இருந்தால் கனவுடன் யோசிப்பேன் ; பேய் படங்களாக இருந்தால் சற்று பயத்துடன் யோசித்து விட்டு, அனைத்தும் கட்டு கதை என்று நகர்வேன் ; தொழில் நுட்ப படங்களாக இருந்தால், அதன் நுட்பங்களை கண்டறிய ஆவேசம் கொள்வோம் ; துப்பறியும் படங்களாக இருந்தால், அவர்களின் புத்தி கூர்மை கண்டு தெளிவடைவோம்... " பொன்மகள் வந்தாள்!" இந்த படம் மட்டும் அனைத்தையும் மீறி, ஏதோ ஒரு ஆழமான விஷயத்தை மிக ஆசுவாசமாக உத்வேகமாக சமூகத்திடம் கொண்டு செல்ல விளைகிறதோ என்ற எண்ணம் மனம் எங்கிலும்! பார்த்து பல மணி நேரம் ஆகியும், மனம் எங்கிலும் ரணங்கள் தொத்தி கொண்டு, தேகத்தில் இருந்து இறங்க மறுக்கிறது . உண்மையில் ஒவ்வொரு பெண்ணின் வலிகள், இங்கே அவர்களால் மறைக்கப்படுகிறது ! சமூகத்தால் மறுக்கப்படுகிறது ! ஒரு பெண் சீதை என்பதற்கும் அவளே சாட்சி ; அவள் வேசி என்பதற்கும் அவளே சாட்சி . அவள் சீதை என்பதற்கும், இல்லை வேசி என்பதற்கும் எந்த ஆவணங்களையும் பிறப்பிக்க இயலாது. குற்றவாளி கூண்டில் ஏற்றி நிறுத்தி விட்டு, ' உன்னை கற்பழித்தவர்கள் யார் ? ' , ' எதற்காக கற்பழித்தார்கள் ? ' , என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள் தொடுக்கும் இந்த சமூகம். அவள் எப்படி பதில் கூறுவாள்? . அவள் மாதவிடாயை கூட தீட்டு என்று ஒதுக்கி வைத்த சமூகம் ஆயிற்றே ; அவள் உடைகளில் படிந்த சிவப்பு நிறங்களை கண்டு கேலி செய்த சமூகம் ஆயிற்றே ; அவள் மாதத்தில் மூன்று நாள் துவண்டால் கூட, அகோர கண்கள் அவளை துகிலுறிப்பதை நிறுத்த இயலாத சமூகம் ஆயிற்றே ! இப்படி அனைத்தையும் செய்து விட்டு, உன் பிரச்னைகளை தைரியமாக வெளியில் சொல், நாங்கள் இருக்கிறோம் என்று கூறினால், அவளால் உங்களை முழுமையாக நம்ப முடியுமா ? ! " வார்த்தைகளை விட, இங்கே செயல்களுக்கு மட்டுமே வலிமை அதிகம்!" சமூகம் அவள் மீது தொடுக்கும் செயல்கள் எல்லாமே, அவளை காயப்படுத்துகிறது. இத்தனையும் செய்து விட்டு , " என்னிடம் மனம் விட்டு பேசு, உன் மனக் குமுறல்களை என்னிடம் பொரிந்து தள்ளி விட்டு" என்று அவளிடம் கேட்டால், அவள் எவ்வாறு கூறுவாள். இதுவே ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கை ஆகும். வளர்ந்து விட்டு , விவரம் அறிந்த பெண்களின் நிலை இதுவென்றால், #yqkanmani #நிலா #yqkanmani_yqtamil #yourquotekanmani #ponmagalvanthal

read more
மாற்றம் நிகழுமா ...? 
  ( கீழே படிக்கவும் 👇) எத்தனையோ படங்கள்... புரட்சிகள், மாற்றங்கள், புது தொழில் நுட்பங்கள் என்று மிக உயரிய பரிணாம வளர்ச்சியை பெற்று உள்ளது இன்றைய படங்கள் !
   பொதுவாக எந்த படத்தை பார்த்தாலும், சுமார் ஒரு இரண்டு மணி நேரமாவது, அந்த படத்தை பற்றிய சிந்தனைகள் மனதில் அசை போட்டுக் கொண்டிருக்கும். காதல் படங்களாக இருந்தால் கனவுடன் யோசிப்பேன் ; பேய் படங்களாக இருந்தால் சற்று பயத்துடன் யோசித்து விட்டு, அனைத்தும் கட்டு கதை என்று நகர்வேன் ;  தொழில் நுட்ப படங்களாக இருந்தால், அதன் நுட்பங்களை கண்டறிய ஆவேசம் கொள்வோம் ; துப்பறியும் படங்களாக இருந்தால், அவர்களின் புத்தி கூர்மை கண்டு தெளிவடைவோம்...
     " பொன்மகள் வந்தாள்!" இந்த படம் மட்டும் அனைத்தையும் மீறி, ஏதோ ஒரு ஆழமான விஷயத்தை மிக ஆசுவாசமாக உத்வேகமாக சமூகத்திடம் கொண்டு செல்ல விளைகிறதோ என்ற எண்ணம் மனம் எங்கிலும்! பார்த்து பல மணி நேரம் ஆகியும், மனம் எங்கிலும் ரணங்கள் தொத்தி கொண்டு, தேகத்தில் இருந்து இறங்க மறுக்கிறது . 
      உண்மையில் ஒவ்வொரு பெண்ணின் வலிகள், இங்கே அவர்களால் மறைக்கப்படுகிறது ! சமூகத்தால் மறுக்கப்படுகிறது ! ஒரு பெண் சீதை என்பதற்கும் அவளே சாட்சி ; அவள் வேசி என்பதற்கும் அவளே சாட்சி . அவள் சீதை என்பதற்கும், இல்லை வேசி என்பதற்கும் எந்த ஆவணங்களையும் பிறப்பிக்க இயலாது. 
      குற்றவாளி கூண்டில் ஏற்றி நிறுத்தி விட்டு,
' உன்னை கற்பழித்தவர்கள் யார் ? ' , ' எதற்காக கற்பழித்தார்கள் ? ' , என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள் தொடுக்கும் இந்த சமூகம். அவள் எப்படி பதில் கூறுவாள்? .
     அவள் மாதவிடாயை கூட தீட்டு என்று ஒதுக்கி வைத்த சமூகம் ஆயிற்றே ; அவள் உடைகளில் படிந்த சிவப்பு நிறங்களை கண்டு கேலி செய்த சமூகம் ஆயிற்றே ; அவள் மாதத்தில் மூன்று நாள் துவண்டால் கூட, அகோர கண்கள் அவளை துகிலுறிப்பதை  நிறுத்த இயலாத சமூகம் ஆயிற்றே ! இப்படி அனைத்தையும் செய்து விட்டு, உன் பிரச்னைகளை தைரியமாக வெளியில் சொல், நாங்கள் இருக்கிறோம் என்று கூறினால், அவளால் உங்களை முழுமையாக நம்ப முடியுமா ? !
      " வார்த்தைகளை விட, இங்கே செயல்களுக்கு மட்டுமே வலிமை அதிகம்!" சமூகம் அவள் மீது தொடுக்கும் செயல்கள் எல்லாமே, அவளை காயப்படுத்துகிறது. இத்தனையும் செய்து விட்டு , " என்னிடம் மனம் விட்டு பேசு, உன் மனக் குமுறல்களை என்னிடம் பொரிந்து தள்ளி விட்டு" என்று அவளிடம் கேட்டால், அவள் எவ்வாறு கூறுவாள். இதுவே ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கை ஆகும். வளர்ந்து விட்டு , விவரம் அறிந்த பெண்களின் நிலை இதுவென்றால்,


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile