Nojoto: Largest Storytelling Platform

Best byebyechennai Shayari, Status, Quotes, Stories

Find the Best byebyechennai Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutbye quotes to love, i love you too bye, good bye images with quotes, special shayri for saying bye to teachers from iqbal english 0, summary of good bye party for miss pushpa ts,

  • 1 Followers
  • 1 Stories

ஜீவந்த்

#ஜீவந்த் #விடைபெறுகிறேன் #விடைபெறுகிறேன்சென்னை #byebyechennai #byebye

read more
வந்தாரை வாழ வைக்கும் சிங்காரி நீ!
உழைப்போர்க்கு உயர்வு கொடுக்கும் ஒய்யாரி நீ !

கல்லூரி காலங்களின் கனவில்
இருந்து வெளியே வந்தவளை
நிதர்சன உலகிற்கு வரவேற்றவள் நீ !
என் வாழ்வின் முக்கியமான
தருணங்களில் எனக்கு
உறுதுணையாய் இருந்தவள் நீ !

பிறந்த ஊரை அடுத்து என்
மனதில் நீங்கா இடம் பிடித்து
சிம்மாசனம் போட்டு அமர்ந்தவள் நீ !
பாசமிகுந்த பலரின் அறிமுகம்
பெற்று வாழ்வின் முக்கிய
அங்கமாக மாறிய பல
நல்லுள்ளங்களை பரிசளித்தவள் நீ !

உன்னை பிரிய மனமில்லை
என்றாலும் பிரிந்தாக வேண்டிய சூழ்நிலை.
கொரானா விடைபெற்று சென்ற
பின் காலம் கனிந்தவுடன் சீக்கிரமே 
உன்னை வந்தடைய வேண்டுகிறேன்  !

அதுவரையில் உந்தன்
நினைவலைகளில் நனைந்து கொள்கிறேன்.
நன்றி சென்னையே . மிக்க நன்றி.
விரைவில் சந்திப்போம். !!
- ஜீவந்த்

  #ஜீவந்த்  #விடைபெறுகிறேன் #விடைபெறுகிறேன்சென்னை #byebyechennai #byebye

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile