Nojoto: Largest Storytelling Platform

Best ஆடி Shayari, Status, Quotes, Stories

Find the Best ஆடி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about ஆடியில சேதி சொல்லி, ஆடியோ பாடல், ஆடி கார் கேம், ஆடி கார், ஆடி வெள்ளி,

  • 1 Followers
  • 2 Stories
    PopularLatestVideo

ஜீவந்த்

#ஆடிப்பெருக்கு #காவிரிதாயே #ஜீவந் #yqkanmani #ஆடி

read more

ஆடி ஆடி வாரும் அம்மா
ஆடிப் பாடி பரவசம் அடைய
ஆற்று வெள்ளப்பெருக்காய்
ஆடிப்பெருக்கெடுத்து வர
அகம் மகிழுதம்மா !!

எங்கள் வாழ்வை வளமாக்க வரும்
நின் வருகையைக் கொண்டாட
உற்றார் உறவினர் உடன்
மக்கள் வெள்ளம் திரண்டு
கரையினில் குவியுதம்மா !!

இயற்கை வளங்கள் செழிக்க வரும்
நின்னைப் போற்றி வணங்கிட
பக்குவமாய் முளைப்பாரி வளர்த்து
கரையினிலே நனைந்து குளித்து
புதிதாய் ஆடைகள் உடுத்தி
கன்னிமார்கள் அழைத்து
தலை வாழையிலை விரித்து 

கனிகளுடன் தாம்பூலம் வைத்து 
தீபாராதனைகளுடன் படைத்து
நின் பாதம் தொட்டு
உள்ளம் குளிர வணங்குகிறோம் 
அம்மா !!

-ஜீவந்த்


 #ஆடிப்பெருக்கு #காவிரிதாயே #ஜீவந் #yqkanmani #ஆடி

ஜீவந்த்

#ஜீவந் #ஆடி #தேங்காய் சுடுதல் #தமிழ் #yqkanmani #yqquotes இது நாங்கள் காலம் காலமாய் கொண்டாடும் எங்கள் வட்டார விழா ! இதனை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி !!

read more
அம்மனுக்கு உகந்த 
ஆடி மாதம் முதல் நாளிலே 
அதிகாலையில் நீராடி புது 
ஆடை உடுத்தி உறவினர்
அக்கம்பக்கத்தினர் ஒன்றாய் சேர்ந்து 
ஆடி தேங்காய் எடுத்து 
ஓடு தேய தரைத்து 
ஒரு கண் உடைத்து அதனுள்ளே 
இருக்கும் தண்ணியை விடுத்து 
அரிசி வெல்லம் 
அவல்பருப்பு கலவையாக்கி
ஒன்றாய் தேங்காய் தண்ணியோடு 
உள் சேர்த்து 
அழிஞ்சிமரக் குச்சியை 
ஓட்டையில் சொருகி 
அத்தேங்காய்க்கு திருமஞ்சள் பூசி 
குங்குமம் இட்டு
அக்னி மூட்டி நம் தீய எண்ணங்கள் 
ஒழியத் தேங்காய் சுட்டு 
ஆண்டவனுக்குப் பிராசாதமாய் படைத்து உடைக்க
அதர்மம் அழியத் தர்மம் வெல்லும் !
இவ்வாறே குருஷேத்திரப் போரில் 
அதர்மம் ஒழியத் தர்மம் வெல்ல
நம் மூதாதையர் பின்பற்றினர் 
அவ்வழியே கடைப்பிடித்து நாமும் தர்மம் 
வெல்லப் போற்றுவோமாக !!
                                                 -ஜீவந் #ஜீவந் #ஆடி #தேங்காய் சுடுதல் #தமிழ் #yqkanmani #yqquotes


இது நாங்கள் காலம் காலமாய் கொண்டாடும் எங்கள் வட்டார விழா !
இதனை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி !!


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile