Find the Best இரவு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
இளையவேணிகிருஷ்ணா
White பயணிகள் தனது பேருந்து வரும் வரை காத்திருக்கும் அந்த பயணியர் இருக்கையில் யாரும் இல்லாத அந்த நேரத்தில் சிறிது இளைப்பாறும் அந்த மரத்தின் ஒரு இலையை போல... நான் இந்த பிரபஞ்சத்தின் ஒரு ஓரத்தில் இளைப்பாறி அமர்ந்து இருக்கிறேன்... எனை அழைக்க உரிமையுள்ள கால தேவனோ இந்த பிரபஞ்சத்தின் எந்த திசையில் எனை தேடி அலைகிறாரோ நான் அறியேன்... அவர் வரும் வரை நான் இங்கே போவோர் வருவோரை ஒரு புன்னகை சிந்தி வேடிக்கை பார்த்து களிக்கிறேன் ... என் புன்னகையில் பரவசமடைந்த சிலர் சில இனிப்புகளை திணித்து செல்கின்றனர்... நானோ அதை அவசர கதியில் தின்று தீர்க்கிறேன் அந்த கால தேவன் வரும் முன்னே... #இரவு கவிதை. நாள்:25/01/25/சனிக்கிழமை. #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #love_shayari
இளையவேணிகிருஷ்ணா
White நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கே நேர்மையாகவும் உண்மையாகவும் இருங்கள்! இதுவே வாழ்வின் தவம்! #இரவு சிந்தனை ✨ #இளையவேணிகிருஷ்ணா. நாள் 10/01/25/வெள்ளிக்கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா #sad_shayari
இளையவேணிகிருஷ்ணா
White அந்த பட்டமரத்தின் கவலைகளை இங்கே யார் அறியக் கூடும் கொடிய விஷத்தை கக்கி உயிரோட்டம் நிரம்பிய இந்த பிரபஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக உயிர் இழக்க செய்யும் மனிதர்களிடையே அதை கவனிக்க எவரும் இல்லாமல் காற்றில் அசைந்தாடி நடனம் ஆடி அந்த முழு நிலவின் ஈர்ப்பை பெற்று விட அந்த மரம் போராடுவதை பார்த்து நிலவும் இரக்கம் கொண்டு தனது கிரணங்களால் பெரும் காதல் கொண்டு அணைத்துக் கொள்ளும் போது உயிர் பிழைத்து ஆனந்தம் கொள்கிறது... இங்கே உயிரோட்டத்தின் மகத்துவம் பெரும் காதலில் உள்ளது என்று அந்த மூட மனிதர்கள் அறியமாட்டார்கள் என்று இந்த பிரபஞ்சம் ரகசியமாக பேசிக் கொள்கிறது... #இரவு கவிதை 🍁. #இளையவேணிகிருஷ்ணா. நாள் 22/07/24/திங்கட்கிழமை. முன்னிரவு 8:54. ©இளையவேணிகிருஷ்ணா #moon_day
இளையவேணிகிருஷ்ணா
White எதிர் மறை சிந்தனை உடையவர்களிடம் உங்கள் உரையாடலை குறைத்துக் கொள்ளுங்கள்... உண்மையில் அவர்கள் உங்களிடம் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் உள்ள நேர்மறை எண்ணங்களையும் குறைத்து உங்களை சோர்வடைய செய்து விடுவார்கள்... இறைவனின் பூரண அனுகிரகம் உள்ளவர்கள் எது விசயமாகவும் எதற்காக பயம் கொள்ள வேண்டும்?? #இளையவேணிகிருஷ்ணா. #இரவு சிந்தனை 🍁. நாள் 21/07/24. ஞாயிற்றுக்கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா #guru_purnima
இளையவேணிகிருஷ்ணா
White கடந்து சென்ற பாதையை பற்றி சிறிதும் நினைவில் இல்லை.. நினைவிருத்த தேவையுமில்லை! எதிரே இருக்கும் பாதையின் நீட்சியின் சூட்சமங்கள் புரியவில்லை.. புரிந்துக் கொள்ள அவசியமும் எனக்கு இல்லை... இந்த இரண்டிற்கும் இடையே என் கால்கள் முத்தமிடும் இதோ இப்போதைய சாலை எனை நகர்த்தி செல்கிறது... அங்கே சாலையின் முடிவில் காலம் ஒரு சிறு குழந்தையின் வடிவில் எனை அணைத்து தோளில் சாய்த்து ஒரு சூட்சம உறக்கத்திற்கு அழைத்துச் செல்லும் நாளில் நான் சுகமாக உணரும் தருணத்தில் நான் நடந்து வந்த பாதையின் கதையை அங்கே யாரோ யாரோடோ விவாதிக்கும் போது மட்டும் நான் சுமையாகி கணக்கிறேன் அந்த காலத்தின் கைகளில்.... #இரவு கவிதை 🍁 #இளையவேணிகிருஷ்ணா. நாள்:17/07/24/புதன் கிழமை. முன்னிரவு பொழுது 10:48. ©இளையவேணிகிருஷ்ணா #sad_shayari
இளையவேணிகிருஷ்ணா
White தொலைந்து போன கனவுகளின் சாயலின் நிழலொன்று என்னை விடாமல் துரத்தி வருகிறது பாவம் அது என்னை துரத்தி வந்து மூச்சிரைக்க என் பெயரை சொல்லி உறுதிப்படுத்திக் கொண்டு கை அசைவில் கொஞ்சம் தண்ணீர் கேட்டு நிற்க நான் அதை கொடுக்க இயலாத கையறு நிலையில் என் உயிர் என் உடலில் இருந்து வெளியேற துடிப்பதை பார்த்து அந்த நிழல் என்னை தாங்கி பிடித்து என் கரங்களில் உயிர் துறக்கும் பெரும்தன்மையை இங்கே யார் அறியக் கூடும்? #இரவு கவிதை 🍁 #இளையவேணிகிருஷ்ணா. நாள் 08/07/24/திங்கட்கிழமை. முன்னிரவு பொழுது 10:30. ©இளையவேணிகிருஷ்ணா #love_shayari
இளையவேணிகிருஷ்ணா
White வெறுமையை தாங்கிய பொழுதொன்றில் வண்ண கனவுகளை அசைப்போட்டு முடிப்பதற்குள் வெறுமையை கொஞ்சம் தூர வைத்து மெல்ல உறங்கி விடுவதில் முனைப்பு காட்டி கொஞ்சம் எனக்கான விடுதலையை போராடி பெற்று தந்து விடுகிறது இமைகளும் இந்த கருமை தாங்கிய அமாவாசை இரவும்... #இரவு கவிதை 🍁 #இளையவேணிகிருஷ்ணா. நாள்:04/07/24/வியாழக்கிழமை. முன்னிரவு பொழுது 9:45. ©இளையவேணிகிருஷ்ணா #sad_shayari
இளையவேணிகிருஷ்ணா
White இந்த பிரபஞ்சத்தில் நாம் ஒரு பிரயாணி நாம் ஒரு பிரயாணி... இதை மட்டும் மனதில் .வைத்துக் கொள்ளுங்கள்... உங்கள் வாழ்வில் நடப்பது எல்லாம் உங்களை தாக்காமல் இருக்கிறது என்றால் நீங்கள் நிச்சயமாக ஒரு சுமையற்ற பயணத்தை இங்கே ஆனந்தமாக அனுபவிக்கலாம்... #இரவு சிந்தனை 🍁 #இளையவேணிகிருஷ்ணா. நாள்:26/06/24/புதன் கிழமை. முன்னிரவு 9:30. ©இளையவேணிகிருஷ்ணா #milan_night
இளையவேணிகிருஷ்ணா
White இப்படியே நேரத்தை கடத்தி விடுவேன்... இந்த இரவெனும் நதிக் கரையில் ... என்னோடு பிரபஞ்சத்தின் ரகசியத்தை பற்றி உரையாட ஒரு நிலவு... யாரை பற்றியும் குறைப்பட்டுக் கொள்ளாத நட்பாக சில விண்மீன்கள் ... பேரன்பின் ஊற்றை பொழியும் இளம் தென்றல்... காதிற்கு தேனமதுமாக இரவு பூச்சிகளின் ரகசிய மொழிகள்... இது போதும் எனக்கு பகல் எனும் பொழுதில் பெரும் அரக்கர்கள் என் மீது பொழிந்த வன்மத்தின் ரணத்தின் வலியை மறக்க! #இரவு கவிதை 🍁 #இளையவேணிகிருஷ்ணா. நாள் :24/06/24/திங்கட்கிழமை. முன்னிரவு 9:37. ©இளையவேணிகிருஷ்ணா #goodnightimages
இளையவேணிகிருஷ்ணா
White புதிதாக வாங்கிய சட்டை என்றேனும் நைந்து தான் போகும்! அப்படி நைந்து போகும் போது புது சட்டையை வாங்குவதற்கு இயல்பான ஆசை இருக்கும்... அப்படி தான் இந்த நைந்து போன உடலில் இருந்து விடுபட்டு மீண்டும் ஒரு கருவறையில் புகுந்து புத்தம் புது சட்டையாக வெளியே வருகிறோம்... மீண்டும் ஆசையை வளர்த்து பிறந்து இறந்து பிறந்து இறந்து..... தொடர் கதையாக... அந்த ஆசை உங்களுக்கு இருக்கும் வரை இந்த பிறப்பு இறப்பு சூழலில் இருந்து விடுபட முடியாது! #இரவு சிந்தனை ✨ ஆத்ம விசாரம் 🍁 #இளையவேணிகிருஷ்ணா. நாள் 02/06/24. ஞாயிற்றுக்கிழமை. முன்னிரவு பொழுது 11:25. ©இளையவேணிகிருஷ்ணா #flowers