Nojoto: Largest Storytelling Platform

White வெறுமையை தாங்கிய பொழுதொன்றில் வண்ண கனவுகளை

White வெறுமையை தாங்கிய 
பொழுதொன்றில் 
வண்ண கனவுகளை அசைப்போட்டு 
முடிப்பதற்குள் வெறுமையை 
கொஞ்சம் தூர வைத்து 
மெல்ல உறங்கி விடுவதில் 
முனைப்பு காட்டி கொஞ்சம் 
எனக்கான விடுதலையை போராடி 
பெற்று தந்து விடுகிறது 
இமைகளும் இந்த கருமை தாங்கிய 
அமாவாசை இரவும்...
#இரவு கவிதை 🍁 
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:04/07/24/வியாழக்கிழமை.
முன்னிரவு பொழுது 9:45.

©இளையவேணிகிருஷ்ணா
  #sad_shayari