Nojoto: Largest Storytelling Platform

Best கிறுக்கல்_சா_வி Shayari, Status, Quotes, Stories

Find the Best கிறுக்கல்_சா_வி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 33 Stories

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கிறுக்கல்_சா_வி

read more
இம்சிக்கும் 
உன் நினைவுகளை எல்லாம் 
பிரித்தெடுத்து வைத்தேன் 

அருகில் அமர்ந்து
அன்பாய் பேசி மீண்டும் 
புதிதாய் என்னில்

பிறந்து மழலை போல் 
ஆட்டமாடி ரசிக்கும் கணங்களாய் கட்டிப்போட்டுவிடுகிறது....! #கிறுக்கல்_சா_வி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கிறுக்கல்_சா_வி #அ_ஒள_ஃ 41

read more
அகழி போல் அரணாய்
ஆழி கிணற்றின் ஆழமாய்
இனிமை விளைந்திட 
ஈரம் சேர்க்கும் ஏரியாய் 
உயிர் பருகும் இனிய 
ஊருணியாய் எங்கும் 
எழும் ஊற்றாயிருந்தே 
ஏற்றம் ஏந்த செய்து சிந்திய 
ஐயங்களை சிதறியோடவிட்டு 
ஒளிர ஒலிக்கும் அருவியாய் 
ஓடுகின்ற ஆற்றாய் 
ஒளதசியமாய் மாற்றியே
பௌவமான உன் அன்பில்
என்னை மிதக்க செய்கிறாய்
என் உயிரே ...! #கிறுக்கல்_சா_வி
#அ_ஒள_ஃ 41

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

கால கிழிச்சிட போகுது பார்த்து போ... அங்கே கண்ணாடி உடஞ்சி இருக்கு... அங்கே பொறி வச்சிருக்க பார்த்து போ... சரக்கு அடிச்சிட்டு தூக்கி #வலிகளின்_குரல் #குடி_1 #கிறுக்கல்_சா_வி #மனிசன்

read more
கால கிழிச்சிட போகுது
பார்த்து போ...
அங்கே கண்ணாடி
உடஞ்சி இருக்கு...
அங்கே பொறி வச்சிருக்க
பார்த்து போ...

சரக்கு அடிச்சிட்டு தூக்கி
எறிஞ்ச தெய்வமே...
வேற ஏதோ பிடிக்க வச்ச
மகராசா...
நீ பார்த்து போய்டுவ சரி...

அந்த பக்கமா போற பிராணிக்கு
எல்லாம் தெரியாது
பட்டா குத்தி கிழியும்னு
மாட்டுனா வெடி வெடிக்குமோ
உயிர் போற வலி வரும்னு

ஆறறிவு பட்டம் வாங்குன
அறிவுகொழுந்தே 
பார்த்துட்டு ஒதுங்கி போகாம
யாருக்கும் கஷ்ட படாதமாறி 
அப்புறப்படுத்து..

ஏன்ன உன்ன மாறி
ஒரு மனுஷன் தான்
கண்டபடி வீசி
எறிஞ்சிட்டு போனா...
ஏன் நீயா கூட இருக்கலாம் தான்..

~உடைந்த உயிர்
குருதியின் அழுகை ஓலம் 

 கால கிழிச்சிட போகுது
பார்த்து போ...
அங்கே கண்ணாடி
உடஞ்சி இருக்கு...
அங்கே பொறி வச்சிருக்க
பார்த்து போ...

சரக்கு அடிச்சிட்டு தூக்கி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

என் பக்கத்து வீட்டு பொண்ணே எனக்கு பிடிச்ச கருவாச்சியே .. என் சினேகிதியே படு சுட்டியான வாலு மணியே #கிறுக்கல்_சா_வி #கருவாச்சி_மியாவ்_கருவாயன் #பூனைகள் #2658_

read more
ஏய் எங்க போன
நீயும்....

👇👇👇 என் பக்கத்து வீட்டு
பொண்ணே 
எனக்கு பிடிச்ச
கருவாச்சியே ..

என் சினேகிதியே 
படு சுட்டியான
வாலு மணியே

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கிறுக்கல்_சா_வி

read more
நாம் சரியென
செய்தது மற்றவர்க்கு
தவறாய் தெரிய
அதுவே
குறைகள் 
கோவம் என
இதுவரை மனதில்
நினைத்து மறைத்த
அவரவர் எதிர்மறை
எண்ணங்களை 
எல்லாம் திறந்திடும் 
சாவியாகி அனைவர்
பற்றியும் அறியவும் செய்கிறது....! #கிறுக்கல்_சா_வி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கிறுக்கல்_சா_வி

read more
சொல்லாமல் நீ மறைத்தாலும்
மனதில் புதைத்ததை
சொல்லிவிடும்

நீயறிந்த ஒற்றர்களாய்,

உணர்த்தியும்விடும் 
திறந்த புத்தகமாய்

உன் விழிகள் எனக்கு ...! #கிறுக்கல்_சா_வி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கிறுக்கல்_சா_வி

read more
ஒவ்வொருவர்க்கும் வாழும் சூழலும்
அனுபவமும் ஒரே மாதிரி இருப்பதுமில்லை
பிறகு செயலின் விடை 
மட்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்...!

ஒப்பீடு சொல்பவர்கள் நிறைகளை
பார்ப்பதுமில்லை
கேட்பவர்க்கு நினைவில்
ஏதோ ஒரு சுமையை அமர்த்திய
நினைவை அளித்தும் விடுகிறார்கள் ...! #கிறுக்கல்_சா_வி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

விழிகளில் குத்திய முள்களாய் இடர்தந்து தீண்டுவதும் உயிரை ஆழ குடைந்ததில் புடைத்த குருதியையும் நீராய் ருசிப்பதும் சிதறிய மெய் துகள்களில் சாக்கடையாய் மாற்றுவதும் #வலிகளின்_குரல் #கிறுக்கல்_சா_வி

read more
நான் தான்....

(வரிகள் கீழே) விழிகளில் குத்திய முள்களாய்
இடர்தந்து தீண்டுவதும் 

உயிரை ஆழ குடைந்ததில் புடைத்த 
குருதியையும் நீராய் ருசிப்பதும்

சிதறிய மெய் துகள்களில்
சாக்கடையாய் மாற்றுவதும்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கிறுக்கல்_சா_வி #2650_

read more
அனுமதியின்றி கடத்தப்பட்டாலும் 
புகார் சொல்ல முடியவில்லை

ஆயுளுக்கும் குத்தகை கேட்டாலும் 
ஏனென்று மறுக்க முடியவில்லை

வரவை கொடுத்து விட்டாலும்
வட்டியை தடுக்க முடியவில்லை

அடைப்பட்டது சிறையில் என்றாலும் 
சுதந்திரம் கேட்க முடியவில்லை

கடத்தியது மனதை
குத்தகையானது இதயம்
வட்டியாவது நினைவு

அனைத்திற்குமாய்
சிறைப்படுத்தியது விழிகள் 
ஆம் 
அவளே தான்...❤️ #கிறுக்கல்_சா_வி
#2650_

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கிறுக்கல்_சா_வி

read more
தினம் ஒரு அத்தியாயம் ரசித்து
எழுதப்படுகிறது என் நினைவு ஏட்டில் 

புதுப்புது ஊடல் காரணங்களை யோசித்து
மனதில் சமைத்து பரிமாற காத்திருக்கும் என்னவளால் ....! #கிறுக்கல்_சா_வி
loader
Home
Explore
Events
Notification
Profile