Nojoto: Largest Storytelling Platform

Best teakadaikavithaigal Shayari, Status, Quotes, Stories

Find the Best teakadaikavithaigal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos abouttea cup image with love, thought of the day for teachers, poetry on teachers day, kavita in hindi on teacher, thank you card for teacher,

  • 8 Followers
  • 92 Stories

Rajeshwari Thendapani

நித்தம் வேண்டும் முத்தம்❤️ #pravi_quote #teakadaikavithaigal #yqkanmani #tamilkavithai #tamilpoem #tamilquotes #lovequotes #YourQuoteAndMine Collaborating with PRAVEEN

read more
உன் விடாபிடி 
இடை பிடியையும்
தாண்டி நான்
போக எத்தனிக்கும்
தருணம் உனக்கு
உரைத்திடும்
மீண்டும் 
இறுகப்பிடியென்று நித்தம் வேண்டும் முத்தம்❤️

#pravi_quote #teakadaikavithaigal #yqkanmani #tamilkavithai #tamilpoem #tamilquotes #lovequotes   #YourQuoteAndMine
Collaborating with PRAVEEN

Rajeshwari Thendapani

பறித்தாலும் சிரித்திருப்போம்❤️ #pravi_quote #teakadaikavithaigal #yqkanmani #tamilkavithai #tamilquote #tamil #yqraji Collaborating with PRAVEEN

read more
பிரிந்தாலும்
பிறர் நலமாய்
வாழ நினைக்கும்
அவன்/அவள்
காதலின் 
வரங்கள்
 பறித்தாலும் சிரித்திருப்போம்❤️

#pravi_quote #teakadaikavithaigal #yqkanmani #tamilkavithai #tamilquote #tamil  #yqraji
Collaborating with PRAVEEN

அன்பின் இரவல்

அழகிய நாட்கள் . . #மனிதம் #இயற்கை yqகண்மணி #yqkanmani yqதமிழ் #yqtamil #teakadaikavithaigal

read more
கிற கிற வென கிறங்கி போனேன்
தட தட வென ஓடும் ரயிலாய்
பற பற வென பறந்த வாழ்வோ
சுட சுட வென வெந்த இட்லிக்கு
காத்திருக்கும் பட்டினிப் போல் நின்றிருக்க..!
பூமி ஆழமாக சுவாசிக்கிறது..!

கீச் கீச்சென பறவையின் புத்துணர்ச்சி
சட சடவென பூமி கழுவிய மழை
விறு விறுவென நகர்வில் இடைவேளை
திமு திமுவென எனைச் சூழ்ந்த அமைதி
நினைத்தது நினைத்த நேரத்தில் நிகழ்த்திய
நிம்மதியில் மனம் மகிழ்ந்தது..!

நன்றோ..? தீதோ..? இந்த கேள்விக்கு
அப்பாற்பட்டு, மனிதம் கண்டோம் 
என்பதே... நிஜம்...! அழகிய நாட்கள்
.
.
#மனிதம் #இயற்கை #yqகண்மணி #yqkanmani #yqதமிழ் #yqtamil #teakadaikavithaigal

அன்பின் இரவல்

மெய்தீண்டா காதல்...! . மெய் எழுத்துகள் இல்லாத கவிதை..! முயற்சிக்கவும் . . #மௌனத்தாரகை #காதலியம் #teakadaikavithaigal #yqbaba #yqkanmani yqதமிழ்

read more
நா நீ வாழ 
ஆசையடி வா அருகே
உலகழகே 
நிழலுரு போலே
எனை நீ தொடர
உயிரது சடல
சகதிகளாகி 
சரிபெருதே
ஓ..! பிழையே.. பிழையே..
மேனி பாராயோ..!
ஆசை நாயகி தொட
எனை நினையாது 
அவளிடமே சரணாகதி
ஆனதோ..? மெய்தீண்டா காதல்...!
.
மெய் எழுத்துகள் இல்லாத கவிதை..! முயற்சிக்கவும்
.
.
#மௌனத்தாரகை #காதலியம்  #teakadaikavithaigal #yqbaba #yqkanmani #yqதமிழ்

அன்பின் இரவல்

காமனதிகாரம்...! . . #காதலியம் #மௌனத்தாரகை #லாகிதம் #yqbaba yqகண்மணி #yqkanmani #teakadaikavithaigal

read more
மோகக் குளிரில் நண்ணி உயிர்த்தொட
நடுங்கிய நடுக்கம் அடங்கும்  முன்னே
மெல்ல நான் தீண்ட அவிழ்ந்த
மேலாடை நூலை இறுகப் பிடித்து
இன்னும் ஏனடி இம்சை செய்கிறாய்..!

மேலாடை போலே..! உன்மேலே, நானோ
மேவ மேலும் மேலும் மோகப்பாய்ந்து..!
நானே உடல் இழைத்து ஆடையாய் 
உனக்குள்ளே நெய்ய மேலாடை எதற்கடி..!
இன்னும் அந்த கைகள் விலக்கடி..!

எழுதிக் கொள்ளக் கூச்சப்படும் காரியம்
புரிய..! காமத்தில் அசூசி சுத்தமாக..!
அவளிட்ட திலகத்தின் தடங்கள் மேனி
எங்கும் செம்மையாக்கி அவளின் நாணம்
போலே நானும் மெல்லச் சிவந்தேன்..!

உயிர் ஊற்றும் பெருக்கெடுத்து
ஜீவநதியென தடாகம் தேடி ஓய..!
கண்கள் மூடி புஜங்கள் தளர்ந்து 
சிலநேரப் புத்துலகு கண்டுத் துலாவி
காமன் தேசத்து அகதிகள் ஆனோம்..! காமனதிகாரம்...!
.
.
#காதலியம் #மௌனத்தாரகை #லாகிதம் #yqbaba #yqகண்மணி #yqkanmani #teakadaikavithaigal

அன்பின் இரவல்

#காதலியம் #yqbaba #yqkanmani yqகண்மணி #teakadaikavithaigal

read more
ஒரு பொய்யாவது சொல் கண்ணே..!

நம்ப நூறு நிஜங்கள் 
கண் முன்னே இருந்தாலும்.,
மனம் ஏங்குவதோ..?
சில கனிவான 
பொய்களுக்காக தான்..! #காதலியம் #yqbaba #yqkanmani  #yqகண்மணி #teakadaikavithaigal

அன்பின் இரவல்

#காதலியம் #teakadaikavithaigal

read more
இனிதென நின்குரல் என்
செவிபறை தீண்டி இச்சை
சிகிச்சை செய்கிறது...!
இச்செகத்திலே இனிமை
பொழிலுற தேனின் இனிய
நின் மொழி கொஞ்சி
மகிழ நெஞ்செய்தி பெய்தனவோ..!
அன்புடை அங்குல அகல 
பார்வை அரைநொடி நீல..
தீமூட்டிய எரிசென தரைவிட்டு
உயரே பறக்கிறேன் உன்னாலே
உணராது தினம் உறவாடி
இது மறவாது காத்துவிட்டாய்
என் உள்ளம் கொண்டவளே..!
உந்தன் மீன் போன்ற 
கண்களை பார்த்ததும் தந்த 
என்னை பாலாடும் தேகத்தின்
மேலாடை என  மூடாதே..! 
உந்தன் கல்லூரி கணக்கிற்கு
என் காதலை கடனாய் கேட்காதே..! #காதலியம் #teakadaikavithaigal

அன்பின் இரவல்

இது ஒரு ஏகதேச உருவக கவிதை...! நான் மனதில் நினைத்த பொருளை இலையோடு உருவக படுத்தி கவியாக்கியுள்ளேன்..! ஓரளவு புரியும் எதை குறிப்பிட்டேன் என..! புரிந்தால் பூரிப்படையுங்கள்..! புரியாவிடில் என்னை கிறுக்கனென ஏசி புன்னகை செய்யுங்கள்..! #yqbaba yqகண்மணி #yqkanmani #teakadaikavithaigal #yqtamil #காதலியம்

read more
கிளை யுதிர்ந்த இலை தரை
தொடுவதற்குள் ஓராயிரம் எண்ணம்,
உயரத்தில் காற்றடிக்க அல்லாடி
பச்சை தோலுடுத்தி அமைதிக்கு
அளவியலாய்,
மௌனங்கள் பரிணமிக்கும்
பிரளய பூச்சொரிவும், 
புரியா பொருளும் பொதி
சுமையென பறவையின்
எச்சங்கள் ஏந்தி 
யவர்தந்த ஜென்ம சாபல்யமோ
சருகாகி தரை ஏகிய இலை
சட்டென அங்கே கடக்கும் 
பெண்ணின் அங்கம் பாய..
ஆஹா..! அங்கே
துளிர்த்தது அதன் இரண்டாம் 
அத்யாயம் இது ஒரு ஏகதேச உருவக கவிதை...! நான் மனதில் நினைத்த பொருளை இலையோடு உருவக படுத்தி கவியாக்கியுள்ளேன்..! ஓரளவு புரியும் எதை குறிப்பிட்டேன் என..! 
புரிந்தால் பூரிப்படையுங்கள்..!
புரியாவிடில் என்னை கிறுக்கனென ஏசி
புன்னகை செய்யுங்கள்..!

#yqbaba #yqகண்மணி #yqkanmani #teakadaikavithaigal #yqtamil #காதலியம்

அன்பின் இரவல்

#மௌனத்தாரகை #காதலியம் #yqlove #yqkanmani yqகண்மணி #teakadaikavithaigal

read more
கொவ்வை செய்வாய் வல்லிதழ்
முத்தம் பெய்து... சொப்பனமதில் 
மதில்கள் மீறி புரவுகொள்ளும் யட்சினியே
சோபனம் செப்ப மனமுருகி 
திரள்கிறேன் வர்ணம்தீண்டா 
சித்திரமிதில் 

வேழம் போல் உண்டு 
நிறைந்த யான் நித்திரை 
ஆழம் மறந்து சித்திரவதையில்
நலிந்து மெலிந்து தேய்ந்தேன்
நின்றனை நெஞ்சில் வாஞ்சையோடு 
சுமந்தமையால்..! #மௌனத்தாரகை #காதலியம்  #yqlove #yqkanmani #yqகண்மணி #teakadaikavithaigal

அன்பின் இரவல்

#காதலியம் #மௌனத்தாரகை #teakadaikavithaigal #yqkanmani #yqbaba yqகண்மணி

read more
அணங்கே அணங்கின் பொழிலே..!
அசையுறும் எழிலே எயில்மேல் மயிலே..!
தோற்றழிய நில்..!
வடிவே தினையளவு அழிவே..!
திண்ம அடைவே குறையா நிறைவே..!
குற்றுயிராக்கி கொல்..!
மிசையே விசையுறு கசையே..!
சஞ்சார திசையே சங்கல்ப வசையே..!
மெலிதாய் மெல்..!
புணரே புதிரே அடரே 
விடரே விதரே கதிரே சுடரே..!
யாதுமாகி ஆள்..! #காதலியம் #மௌனத்தாரகை   #teakadaikavithaigal #yqkanmani #yqbaba #yqகண்மணி
loader
Home
Explore
Events
Notification
Profile